வாட்ஸ்அப்பில் வரும் போலி forward messages களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் போலிச் செய்திகள் பரவுவதை தடுக்கக் கோரி உலகம் முழுதும் உள்ள அதன் பயனாளர்கள் அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்த வந்தனர்.
வாட்ஸ் ஆப்பின் பயனாளர்களின் கோரிக்கையை ஏற்று புதிய அப்டேட்டில், அனுப்பப்படும் செய்திகள் பார்வார்டு செய்தியாக இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
undefined
இந்த புதிய அப்தேட்டின் மூலம் அந்தச் செய்தி நேரடியாக டைப் செய்யப்பட்டதா? அல்லது வேறு ஒருவரிடம் இருந்து வந்ததை நமக்கு ஃபார்வர்டு செய்யப்பட்டதா? என்று நம்மால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். இதன் மூலம் போலி forward messages பகிரப்படுவது பெருமளவு குறைக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுபோல அந்தச் செய்தியில் இருக்கும் லிங்குகள் சரியானதா அல்லது போலியானதா? என்பதை அறியும் வசதியும் உள்ளது. தவறான லிங்குகள் இருந்தால், சிவப்பு டிக் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களை எச்சரிக்கை செய்யும்.
இதுகுறித்து வாட்ஸ்அப் அறிக்கையில், "தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அப்டேட்டில் உங்களுக்கு வரும் மெசேஜ் ஃபார்வர்டு செய்யப்பட்டதா? என்பதைக் கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தனிநபர் சேட்டில் போலிச் செய்திகளை எளிதில் கண்டறிய முடியும்.
மேலும் இந்த வசதியினால் உண்மையில் உங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து தான் அந்த messages வருகிறதா அல்லது அவர்கள் அதை forward messages செய்தார்களா என்பதை அறிந்து கொள்ளமுடியும். தெரியாத நபர்களிடமிருந்து spam messages வந்தால் அதுகுறித்து புகாரளிக்கும் வசதியும் இந்த அப்டேட்டில் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.