SAMSUNG GALAXY S9; ரூ.50 ஆயிரம் போன்  வெறும் 7900-க்கு...!64ஜிபி மெகா தள்ளுபடி!

 
Published : Jul 06, 2018, 05:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
SAMSUNG GALAXY S9; ரூ.50 ஆயிரம் போன்  வெறும் 7900-க்கு...!64ஜிபி மெகா தள்ளுபடி!

சுருக்கம்

Samsung record profit run ends after reportedly slow Galaxy S9 sales

SAMSUNG GALAXY S9 விலையில் ரூ.50,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த செல்போனை ரூ.7,900க்கு வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.    ஆப்பிள் நிறுவனத்துடன் கடும் போட்டியில் இருக்கும் சாம்சங் நிறுவனம் அடுத்தடுத்து, புதுப்புது அம்சங்களுடன் கூடிய ஸ்மாட்ர்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. மார்ச் மாதம் இந்தியாவில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய SAMSUNG GALAXY S9 ரகத்தில் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட செல்போன் ரூ.57,900 என்ற விலைக்கும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட செல்போன் ரூ.65,900 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.   மிட்நைட் பிளாக், கோரல் ப்ளூ, லிலாக் பர்ப்பிள் ஆகிய 3 வண்ணங்களில் வெளியிடப்பட்ட SAMSUNG GALAXY S9 செல்போன்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. முன்பு ஆப்பிள் நிறுவனம் மட்டுமே முக்கிய போட்டியாளராக விளங்கிய நிலையில், தற்போது விவோ, ஓப்போ, எம்.ஐ. ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் சாம்சங்க போன்களுக்கு கடும் போட்டியை கொடுத்துவருகின்றன. இதனால் SAMSUNG GALAXY S9 போன்களுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது சாம்சங்.  

 சாம்சங் நிறுவனத்தின் இணையதளத்தில் மட்டுமே, இந்த தள்ளுபடி கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட், அமேசான் போன்ற வர்த்தக தளங்களில் இந்த 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை பெற முடியாது. சரி, இந்த தள்ளுபடியை எப்படி பெறலாம் என்று இப்போது பார்க்கலாம்.     அனைத்து வகையான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, 64ஜிபி ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட SAMSUNG GALAXY S9 செல்போனை வாங்கும்போது, ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படும் என்றும், 128ஜிபி மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட செல்போனை வாங்கும்போது ரூ.6,000 கேஷ்பேக் வழங்கப்படும். மேலும், HDFC வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி, பேமெண்ட் செய்யும்போது, கூடுதலாக ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் கேஷ்பேக் 90 நாட்களில் உங்களது HDFC கிரடிட் கார்டு அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.    மேலும், குறிப்பிட்ட சாம்சங் மாடல் ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும்போது, ரூ.33,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும், நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் போன் புதிய மாடலாக இருந்தால் கூடுதலாக ரூ.6,000 தள்ளுபடி வழங்கப்படும் என்றும் சாம்சங் கூறியுள்ளது. 

இந்த வகையில் மட்டும், கேலக்ஸி எஸ்9 விலையில் ரூ.39,000 வரை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். ஏற்கெனவே, சாம்சங் இணையதளத்தில் வாங்குவதற்கு ரூ.5,000, HDFC கிரெடிட் கார்டுக்கு ரூ.6,000 என மொத்தம் ரூ.11,000 வழங்கப்படுவதால், சாம்சங் கேலக்ஸி எஸ்9 விலையில் ஒட்டு மொத்தமாக ரூ.50,000 தள்ளுபடி பெற்று ரூ.7900க்கு இந்த போனை வாடிக்கையாளர்களால் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

நம்பமுடியாத விலையில் ஆண்டு இறுதி ஆஃபர்! Pixel வாங்க இதுதான் சரியான நேரம்!
12.1 இன்ச் திரை, 10,200mAh பேட்டரி… எல்லாம் ஒரே டேப்லெட்டில்! Lenovo Idea Tab Plus விலை?