ரூ.2999 விலையில்,வாட்ஸ் ஆப் செயலி உடன் கூடிய புதிய ஜியோ போனை தற்போது அறிமுகம் செய்து உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்
ஜியோ சிம் முதல் ஜியோ போன் வரை மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதற்கான காரணம் ஜியோ அறிமுகமான சமயத்தில், ப்ரீ டேட்டா மற்றும் ப்ரீ கால்ஸ் என அனைத்தும் இலவசமாக வாரி வாரி வழங்கியதே காரணம்
இந்நிலையில் மேலும் ஒரு சிறப்பு அறிப்விப்பை ஜியோ வெளியிட்டு வாடிக்கையாளர்களை மேலும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது
பொதுவாகவே ஜியோ ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது என்றால் அது ஒரு சிறந்த சலுகையாக தான் இருக்கும் என நம்பும் அளவிற்கு மக்கள் மனதில் தனி இடம் பிடித்து உள்ளது
41 ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் வந்த ஜியோ போன் 2-வை ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி சேர்ந்து வெளியிட்டனர்.
இதன் சிறப்பு அம்சங்கள்:
வாட்ஸ் ஆப் உடன் கூடிய மொபைல்
ரூ.2999 விலை
கீ பேடு கொண்டது
2 சிம் பயன்படுத்தக் கூடியது
512MB RAM,
4GB Internal Storage,
128 GB (மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டது )
பேட்டரி 2,000 mAh
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல சிறப்பு அம்சங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்பதில் ரிலைன்ஸ் நிறுவனம் மும்முரமாக உள்ளது.