வாட்ஸ்அப்பில் சீக்ரெட் கோடு அம்சம் அறிமுகம்! லாக் செய்த உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

By SG Balan  |  First Published Nov 13, 2023, 11:36 PM IST

லாக் செய்யப்பட்ட சாட்களை ரகசிய குறியீடு (Secret Code) மூலம் மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் அம்சத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. 


மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்காக பல அம்சங்களை உருவாக்கி வருகிறது. அண்மையில் ஐபி முகவரியைப் பாதுகாக்கும் அம்சத்தைக் கொண்டுவந்தது. இந்த அம்சம் வாட்ஸ்அப் அழைப்புகளின்போது பயனர்களின் ஐபி முகவரிகளைப் பாதுகாக்கிறது.

இப்போது, லாக் செய்யப்பட்ட சாட்களை ரகசிய குறியீடு (Secret Code) மூலம் மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் அம்சத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. WABetaInfo அளிக்கும் தகவலின்படி, இந்த அம்சம் கூகுள் பிளேயில் பீட்டா பயன்ரகளுக்கு மட்டும் தற்போது கிடைக்கத் தொடங்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த 7 மெசேஜ் வந்தால் உஷாரா இருக்கணும்! தப்பித் தவறி கிளிக் செய்தால் ஆபத்து உறுதி!

இந்த அம்சம் வரவிருக்கும் புதிய அப்டேட்டில் அனைவருக்கும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்போது சில தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்கள் மட்டும் இந்த அம்சத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

இந்த சீக்ரெட் கோடு அம்சத்துடன், பயனர்கள் தங்கள் லாக் செய்த உரையாடல்களை சிறப்பாக மறைத்து வைக்க முடியும். மறைத்து வைத்திருக்கும் தனிப்பட்ட உரையாடல்களை அணுகுவதற்கு வேறு விதமான பாதுகாப்பு வழிமுறைகளும் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதை விளக்கும் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகியுள்ளன. லாக் செய்த உரையாடல்களின் பட்டியலில் புதிதாக Setting என்ற ஆப்ஷன் இருக்கும். அதன் மூலம் பயனர்கள் தாங்கள் விரும்பும் தனிப்பட்ட உரையாடலைத் திறக்க சீக்ரெட் கோடு ஒன்றை பயன்படுத்தலாம்.

சீக்ரெட் கோடு செட் செய்த பிறகு, அந்தக் குறிப்பிட்ட உரையாடலை பார்ப்பதற்கு Chats பகுதியில் உள்ள தேடல் பெட்டியில் அந்த சீக்ரெட் கோடை டைப் செய்து எளிதாக அணுக முடியும். மேலும், பிரைவசி செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று லாக் செய்த உரையாடல்களின் பட்டியலை விரைவாக அழிக்க உதவும் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஒரு பயனர் ரகசியக் குறியீட்டை மறந்து, லாக் செய்த உரையாடல்களை அணுகுவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் பயன்படும் என்று கூறப்படுகிறது.

அடுத்த அதிரடிக்கு ரெடியாகும் ஆப்பிள்! ஐபாட் புதிய மாடல்களில் வரப்போகும் ஸ்பெஷல் அப்டேட்!

click me!