இதுதான் ஐபோன் கேமரா செய்யும் மாயாஜாலம்! தீபாவளியில் புதிய ட்ரெண்ட் செட் செய்த ஆப்பிள்!

By SG Balan  |  First Published Nov 12, 2023, 11:20 PM IST

தீபாவளியை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனத்திற்காக இந்தப் படங்களை ஐபோன் கேமராவில் கிளிக் செய்திருப்பதாகவும் போரஸ் விமதாலால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


புதிய ஐபோன் 15 சீரீஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆப்பிள் நிறுவனம் #shotoniPhone என்ற புதிய ஹேஷ்டேக்கை வெளியிட்டுள்ளது.  புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் போரஸ் விமதாலால் ஐபோனில் எடுத்த தீபாவளி இனிப்புகளின் படங்களை #ShotOniPhone என்ற ஹேஷ்டேகுடன் வெளியிட்டுள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனத்திற்காக இந்தப் படங்களை ஐபோன் கேமராவில் கிளிக் செய்திருப்பதாகவும் போரஸ் விமதாலால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

undefined

தனது படங்களுக்கு கேப்ஷன் கொடுத்திருக்கும் விமதாலால், "தீபாவளி இனிப்புகள் வாழ்க்கையை கொண்டாடுவதற்கானவை மட்டுமல்ல, ஆன்மாவை மகிழ்விக்கும் கலைப் படைப்புகள்" என்று தெரிவித்துள்ளார். இந்தப் படங்களை ஆப்பிள் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பதிவிட்டுள்ளது. "புகைப்படங்கள் படங்கள் மூலம் நான் அன்றாட பொருட்களின் அழகைக் கண்டுபிடிக்கிறேன்" என்று விமதாலால் கூறினார்.

மனசை லேசாக்கும் வீடியோ கேம்... வேறு எதுவும் எனக்குத் தெரியாது: மனம் திறக்கும் எலான் மஸ்க்!

விமதாலால் இந்திய இனிப்பு வகைகளை வித்தியாசமான முறையில் அழகாகப் படம்பிடித்துள்ளார். ஒரு படத்தில் நூற்றுக்கணக்கான பர்ஃபிகள் அழகாக சிற்பம் போல அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு படத்தில் வெவ்வெறு அளவுகளில் உள்ள மூன்று லட்டுகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 14ஆம் தேதி மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் 'டுடே அட் ஆப்பிள்' நிகழ்வு ஒன்றையும் விமதாலால் நடத்துகிறார். செவ்வாய் இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் நடைபெற்று வரும் 'லைட் அப் மும்பை' தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடக்க உள்ளது என ஆப்பிள் நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

டுடே அட் ஆப்பிள் நிகழ்வுகளில் இலவச வொர்க்‌ஷாப் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் தயாரிப்புகளை சிறப்பாக பயன்படுத்துவது தொடர்பான பயிற்சியை வழங்குகிறது. பங்கேற்பாளர்கள் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங், இசை அமைப்பு போன்ற பலவற்றைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

இந்த அமர்வுகள் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த நிபுணர்களால் நடத்தப்படுகின்றன. இது ஆப்பிள் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஆப்பிள் சாதனத்தின் முழு திறனையும் அறிந்துகொள்ள வழிவகுக்கிறது.

மொபைல் கேமராவில் சூப்பரான போட்டோஸ் எடுக்கலாம்! இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க!

click me!