வாங்க வாங்க… WhatsAppல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அப்டேட்!

By Narendran SFirst Published Jan 20, 2023, 9:59 PM IST
Highlights

வாட்ஸ்அப்பில் இனி வரும் நாட்களில் ஒரிஜினல் பிக்சல் மாறாமல், தெளிவான படங்களை அனுப்பும் அம்சம் வரவுள்ளது.

வாட்ஸ்அப்பில் இனி வரும் நாட்களில் ஒரிஜினல் பிக்சல் மாறாமல், தெளிவான படங்களை அனுப்பும் அம்சம் வரவுள்ளது. வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக டெலகிராம் உள்ளிட்ட பல சமூக தளங்கள் வளர்ந்து வருகின்றன. இதனால், போட்டியை சமாளிக்கும் வகையில் வாட்ஸஅ்ப்பில் பயனர்களுக்கு வசதியாக பல்வேறு அப்டேட்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள அம்சங்களின்படி, இனி வாட்ஸஅப்பில் அனுப்பப்படும் படங்களை தரம் குறைக்கப்படாமல் அப்படியே அனுப்பலாம். பொதுவாக HD படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பும் போது அதிகளவு டேட்டா எடுத்துக்கொள்ளும். எனவே தான் வாட்ஸஅப்பில் இதுவரையில் எவ்வளவு பெரிய HD படங்கள் அனுப்பினால் கூட அதன் தரத்தை சுருக்கி அனுப்புகிறது. ஆனால், தற்போது மற்ற சமூகவலைதளங்களில் HD படங்களை அனுப்பும் வசதி வந்துவிட்டதால், வாட்ஸ்அப்பிலும் கொண்டு வரப்படுகிறது.

இதையும் படிங்க: Netflix நிறுவனத்தின் சிஇஓ ராஜினாமா.. பெருநிறுவனங்களில் அடுத்தடுத்து சிக்கல்!

வாட்ஸ்அப் செயலியின் சோதனை தளமான பீட்டா பதிப்பில் ஏற்கனவே சில அம்சங்கள் சோதிக்கப்பட்டு வருகிறது.  அதில் ஒன்றாக, விரைவில் அசல் தரத்தில் படங்களைப் பகிர உங்களை அனுமதிக்கும் என தெகிறது.  இது இந்த ஆண்டு Whatsapp செயலியில் வருகின்ற மிகப்பெரிய புதுப்பிப்புகளில் ஒன்றாக இருக்கும். இதன் மூலம் உயர்தர புகைப்படங்களை (HD, HDres) வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இது குறித்து WaBetaInfo தளத்தில் சில விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் வந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டின் படி , WhatsApp செயலியில் இமேஜ் தரம் என்ற ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் படங்களை அனுப்பும் போது இந்த ஆப்ஷன் புலப்படும். அப்போது,  ஐகான் வரைதல் மற்றும் பிற கருவிகள் இருக்கும் திரையின் மேற்புறத்தில் இந்த ஆப்ஷன் தோன்றும். 

இதையும் படிங்க: Google Layoffs 2023: சுமார் 12 ஆயிரம் பேர் வேலையில் இருந்து நீக்கம்

இதன் அடிப்படையில் ஒருவர் அசல் தரத்தில் புகைப்படங்களை அனுப்ப விரும்பினால், இதை தேர்வு செய்து அனுப்பலாம். மீடியாவைப் பகிர விரும்பும் ஒவ்வொரு முறையும் தர அமைப்பை மாற்ற வேண்டும். ஆனால், இந்த ஆப்ஷனை ஆன் செய்தால் அதிகளவு டேட்டா எடுத்துக்கொள்ளும்.  அல்லது Wi-Fi நெட்வொர்க் மூலம் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் இப்போது அனுப்பும் படங்களுடன் ஒப்பிடும்போது படங்களின் தெளிவுத்திறன் மற்றும் அளவானது மிகவும் அதிகமாக இருக்கும்.  குறைந்த தரமான உள்ளடக்கம் மிக விரைவாக அப்லோடு செய்யப்படும், அதிக தரவை பயன்படுத்தாது. இனி அதிக டேட்டா எடுத்துக்கொள்ளும், பதிவேற்றம் நேரமும் அதிகமாக இருக்கும். இந்த அப்டேட் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

click me!