கூகுளின் தாய் நிறுவனம் உலகளவில் சுமார் 12 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது.
கூகுளின் தாய் நிறுவனம் உலகளவில் சுமார் 12 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக பெருநிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், கூகுளின் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் உலகளவில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த அமெரிக்காவில் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்கள் ஏற்கனவே மின்னஞ்சலைப் பெற்றுள்ளனர், மற்ற இடங்களில் உள்ள ஊழியர்களுக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்.
இதையும் படிங்க: ஆண்ட்ராய்டுக்கான Twitter Blue கட்டணம் நிர்ணயம்.. கொள்ளை லாபத்தில் சந்தாக் கட்டணம்?
இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் ‘தற்போது கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்ட கூகுள் நிறுவனம், தற்போது கடுமையான பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது. கூகுள் வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தவர்கள் விடைபெறுவது என்பது என்னை மிகவும் பாதித்துள்ளது. இதற்கு முழுபொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிறுவனம் ஒரு சுமூகமான "மாற்றத்தை" உறுதி செய்யும் என்பதையும் சுந்தர் பிச்சையின் கடிதம் எடுத்துக்காட்டுகிறது.
முழு அறிவிப்பு காலத்தில் (குறைந்தபட்சம் 60 நாட்கள்) பணியாளர்களுக்கு கூகுள் ஊதியம் வழங்கும். கூகுளில் 16 வார சம்பளம் மற்றும் ஒவ்வொரு கூடுதல் வருடத்திற்கும் இரண்டு வாரங்கள் தொடங்கி ஒரு விடைபெறும் ஊதிய வழங்கும் என்று தெரிகிறது. இதற்கு தகுதிபெற்ற பணியாளர்கள் அவர்களது ஒப்பந்தங்களின்படி போனஸ் மற்றும் ஹெல்த் பலன்களையும் பெறுவார்கள். மறுபுறம், அமெரிக்காவிற்கு வெளியே உள்ள கூகுள் பணியாளர்கள் அவர்களது ஒப்பந்தங்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டுதல்களின்படி, அதற்கு ஏற்ப ஊதிய வகைகளைப் பெறுவார்கள். திங்களன்று கூகுள் ஊழியர்களுடன் ஒரு டவுன் ஹால் மீட்டிங் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: Netflix நிறுவனத்தின் சிஇஓ ராஜினாமா.. பெருநிறுவனங்களில் அடுத்தடுத்து சிக்கல்!
கடந்த 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், கூகுள் நிறுவனத்தில் புதிதாக வேலையில் எடுக்கும் நிலைகளை இடைநிறுத்தியது, மேலும் பணியாளர்கள் கடினமாக உழைக்கவில்லை என்றும் பிச்சை சுட்டிக்காட்டியிருந்தார். முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே கூகுள் நிறுவனமும் பணிநீக்கம் செய்வதற்கான முயற்சிகளை தொடங்கியது. இதே போல் மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களும் உலகளாவிய பொருளாதாரத்தின் பலவீனம் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன.