வாட்ஸ்அப் வாய்ஸ் மெமேஜிலும் 'வியூ ஒன்ஸ்' ஆப்ஷன் அறிமுகம்! பயன்படுத்துவது எப்படி?

By SG Balan  |  First Published Dec 9, 2023, 9:08 PM IST

ஒருமுறை மட்டும் பார்க்கக்கூடிய வாய்ஸ் மெசேஜ் உள்பட எல்லா தனிப்பட்ட செய்திகளும் எப்போதும் போல என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் வாட்ஸ்அப் கூறுகிறது.


வாட்ஸ்அப் ஆடியோ மெசேஜ்களை ஒருமுறை மட்டும் பார்க்க அனுமதிக்கும் 'வியூ ஒன்ஸ்' ஆப்ஷனை ஆடியோ மெசேஜ்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. ஏற்கெனவே போட்டோ மற்றும் வீடியோக்களுக்கு மட்டும் இருந்த இந்த அம்சம், தற்போதைய அம்சத்தைப் போலவே, இன்று முதல் ஆடியோ மெசேஜ்களுக்கும் பயன்பாட்டுக்கு வருகிறது.

ஒருமுறை மட்டுமே கேட்கக்கூடிய செய்தியை ஆடியோ மெசேஜாக அனுப்ப விரும்பும் சூழ்நிலைகளில் இந்த வியூ ஒன்ஸ் ஆப்ஷன் பயனுள்ளதாக இருக்கும்.

Tap to resize

Latest Videos

இந்த வசதியை பயன்படுத்துவதும் எளிது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டும் பார்க்கும் வகையில் அனுப்புவதற்கு செய்வதையே இதற்கும் பின்பற்றலாம். அந்த வாய்ஸ் மெசேஜைப் பெறும் நபருக்கும் ஒருமுறை மட்டுமே கேட்க முடியும் என்ற தெரியும் வகையில் வியூ ஒன்ஸ் ஐகான் இருக்கும்.

அயோத்தி ராமர் கோயில் கருவறையின் புகைப்படங்கள் வெளியீடு! இன்னும் 10% வேலை தான் பாக்கி!

ஒருமுறை மட்டும் பார்க்கக்கூடிய வாய்ஸ் மெசேஜ் உள்பட எல்லா தனிப்பட்ட செய்திகளும் எப்போதும் போல என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் வாட்ஸ்அப் கூறுகிறது.

ஒவ்வொரு முறையும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது வியூ ஒன்ஸ் ஆப்ஷனைத் தேர்நவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருமுறை கேட்ட பின்பு, மீண்டும் கேட்க முடியாது.

வியூ ஒன்ஸ் ஆடியோ மெசேஜ் அனுப்பப்பட்ட 14 நாட்களுக்குள் பெறுநர் அதைத் திறந்து கேட்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அது காலாவதியாகி, உரையாடலில் இருந்து மறைந்துவிடும். அந்த விதமாக அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட எந்த ஆடியோ மெசேஜையும் ஃபார்வேர்டு செய்யவோ சேவ் செய்யவோ முடியாது.

மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

click me!