WhatsApp Community உருவாக்குவது எப்படி?

By Dinesh TG  |  First Published Nov 9, 2022, 9:38 PM IST

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் கம்யூனிட்டி என்ற அம்சத்தை அறிவித்தது. தன் மூலம் பயனர்கள் 50 வாட்ஸ்அப் குழுக்களை ஒன்றிணைத்து ஒரு கம்மயூனிட்டியாக உருவாக்கலாம். அந்தவகையில், இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டியை உருவாக்குவது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்


வாட்ஸ்அப்பில் பயனர்களைக் கவரும் விதமாக வாட்ஸ்அப் கம்யூனிட்டி என்ற அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் மக்கள், பள்ளியில் உள்ள பெற்றோர்கள், பணியிடங்கள் போன்றவர்களை கம்யூனிட்டி என்ற ஒரே குடையின் கீழ் இணைக்கலாம், அரட்டை அடிக்கலாம், தகவல்களை பகிரலாம்.

இதுவும் கிட்டத்தட்ட வாட்ஸஅப் குரூப் போல் இருந்தாலும், பல்வேறு குரூப்களை கம்யூனிட்டியின் கீழ் ஒன்றாக ஒழுங்கமைக்கலாம்.

Tap to resize

Latest Videos

வாட்ஸ்அப்பில் கம்யூனிட்டியை உருவாக்கும் முறை:

  • படி 1- உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்
  • படி 2- New Chat என்பதைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் New Community தேர்ந்தெடுக்கவும்
  • படி 3- இப்போது, ​​Get Started என்பதைத் தட்டவும்.
  • படி 4- கம்யூனிட்டியின் பெயர், அறிமுகம், ப்ரொபைல் படம், ஆகியவற்றை அமைக்கவும். கம்யூனிட்டியின் பெயர் 24 எழுத்துகளுக்குள்ளாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  • படி 5- கேமரா ஐகானைத் கிளிக் செய்து கம்யூனிட்டிக்கு ஏற்ற ஐகானையும், விளக்கத்தையும் சேர்க்கலாம்.
  • படி 6- இப்போது, Next என்பதைக் கிளிக் செய்து ​​ஏற்கனவே உள்ள குரூப்களை சேர்க்கவும் அல்லது புதிய குரூப்பை உருவாக்கவும்.
  • படி 7- உங்கள் கம்யூனிட்டியில் குரூப்களைச் சேர்த்து முடித்ததும், Create என்பதைக் கிளிக் செய்யவும். அவ்வளவு தான். வாட்ஸ்அப் கம்யூனிட்டியை எளிதாக உருவாக்கலாம்.

Twitter-க்குப் போட்டியாக வளர்ந்து வரும் மற்றொரு சமூக ஊடகம்! ஒரே வாரத்தில் 2.3 லட்சம் பயனர்கள் இணைந்தனர்!

வாட்ஸ்அப் கம்யூனிட்டியிலுள்ள சிறப்பம்சங்கள்:

கூடுதலாக 50 குரூப்களை நீங்கள் சேர்க்கலாம், 5,000 உறுப்பினர்களை சேர்க்கலாம். எந்தவொரு கம்யூனிட்டி உறுப்பினர் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம்.  உங்கள் கம்யூனிட்டிக்காக ஒரு கம்யூனிட்டி அறிவிப்பு குரூப் தானாகவே உருவாக்கப்படும். அறிவிப்பு குழுவில் உள்ள அனைத்து கம்யூனிட்டி உறுப்பினர்களுக்கும் கம்யூனிட்டி அட்மின்கள் மெசேஜ் அனுப்பலாம்.

வாட்ஸ்அப்பில் தற்போது வெளிவந்துள்ள அப்டேட்டின்படி, குழுவில் கருத்துக்கணிப்பு நடத்தலாம், 32 பேர் வரையில் வீடியோ கால் செய்யலாம், 1024 பேர் வரையில் சேர்த்து குரூப் உருவாக்கலாம். ஈமோஜி, ரியாக்ஷன்கள், பெரிய அளவிலான கோப்பு வகைகள் பகிரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!