இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் எதிர்கால அப்டேட்டில் வழங்கப்படும். க்ரூப்-இல் இருந்து வெளியேறும் போது வித்தியாசமான தகவலை பார்க்க முடியும்.
வாட்ஸ்அப் நிறுவனம் க்ரூப்களில் இருந்து பயனர்கள் சத்தமின்றி வெளியேறும் வசதியை வழங்க இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு நீண்ட காலம் பொறுமையுடன் அமைதியாக இருந்து வந்த வாட்ஸ்அப் க்ரூப்களில் இருந்து யாருக்கும் எந்த தடயமும் இன்றி வெளியேறி விட முடியும். எனினும், இவ்வாறு செய்யும் போது க்ரூப் அட்மின்களுக்கு மட்டும் நீங்கள் க்ரூப்-இல் இருந்து வெளியேறியது தெரிந்து விடும்.
இதையும் படியுங்கள்: மிகக் குறைந்த விலையில் சாம்சங் போல்டபில் போன்... இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்..!
அடுத்து வெளியாகும் அப்டேட்டில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிடத்தக்க வாட்ஸ்அப் டிராக்கர் WABetainfo இது பற்றிய தகவலை முதலில் வெளியிட்டது. தற்போதைய சூழலில், வாட்ஸ்அப் க்ரூப்-இல் இருந்து வெளியேறும் போது க்ரூப்-இல் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடும். விரைவில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் இவ்வாறு செய்யாமல், அட்மின்களுக்கு மட்டுமே தெரியும்.
இதையும் படியுங்கள்: இது போதுமே... இண்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்த ஈசி டிப்ஸ்...!
வாட்ஸ்அப் க்ரூப் அப்டேட் தற்போது உருவாக்கப்பட்டு வரும் நிலையில், இதன் வெளியீடு முழுமையான சோதனைகள் நிறைவு பெற்றதும் நடைபெறும். முதற்கட்டமாக இந்த அம்சம் பீட்டா வெர்ஷில் வெளியிடப்பட்டு அதன் பின் சில வாரங்கள் கழித்து ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படும் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்: ஸ்மார்ட்போன்களுக்கு வேற லெவல் சலுகைகள் - அமேசான் அதிரடி...!
“இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் எதிர்கால அப்டேட்டில் வழங்கப்படும். க்ரூப்-இல் இருந்து வெளியேறும் போது வித்தியாசமான தகவலை பார்க்க முடியும். க்ரூப் அட்மின்களுக்கு மட்டுமே நீங்கள் க்ரூப்-இல் இருந்து வெளியேறுவது தெரியப்படுத்தப்படும். ஆனால், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் மற்றொரு புது அம்சம் பற்றிய தகவல்கள் இடம்பெற்று உள்ளன. இந்த அம்சம் ஏற்கனவே க்ரூப்-இல் இருந்தவர்களை பார்க்க வழி செய்கிறது. இதன் மூலம் க்ரூப்-இல் இருந்து வெளியேறியவர்களை தொடர்ந்து பார்க்க முடியும்.” என WABetainfo தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புது அம்சம் வாட்ஸ்அப் க்ரூப்-இல் யார் யார் இருந்தனர் என்ற விவரங்களை க்ரூப்-இல் யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு, அதன் பின் ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படும். இந்த அம்சம் எவ்வாறு செயல்படும், இது எப்போது வெளியாகும் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.