மிகக் குறைந்த விலையில் சாம்சங் போல்டபில் போன்... இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்..!

By Kevin Kaarki  |  First Published Jun 29, 2022, 8:30 PM IST

சாம்சங் மொபைல் எக்ஸ்பீரியன்ஸ் பிரிவு லோ-எண்ட், குறைந்த விலை போல்டபில் மாடலை உருவாக்கும் பணிகளை துவங்கி விட்டதாக கூறப்படுகிறது.


சாம்சங் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விலை 2024 வாக்கில் KRW 1 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 61 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் எண்ட்ரி லெவல் போல்டபில் ஸ்மார்ட்போன்களில் மிக முக்கிய அம்சங்கள் மட்டும் வழங்கப்படும் என்றும் மேம்பட்ட அம்சங்கள் டாப் எண்ட் வேரியண்ட்களில் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்: இது போதுமே... இண்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்த ஈசி டிப்ஸ்...!

Tap to resize

Latest Videos

undefined

சமீபத்திய சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 3 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 84 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இந்த நிலையில், கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் மொபைல் எக்ஸ்பீரியன்ஸ் பிரிவு லோ-எண்ட், குறைந்த விலை போல்டபில் மாடலை உருவாக்கும் பணிகளை துவங்கி விட்டதாக கூறப்படுகிறது. புதிய குறைந்த விலை போல்டபில் ஸ்மார்ட்போன் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படியுங்கள்: ஸ்மார்ட்போன்களுக்கு வேற லெவல் சலுகைகள் - அமேசான் அதிரடி...!

போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்கள் பிரிவில் 2022 முதல் காலாண்டு வாக்கில் சாம்சங் நிறுவனம் 90 சதவீத பங்குகளை வைத்து இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் அது 74 சதவீதமாத சரிவடைந்து இருக்கிறது. தற்போதைய தகவல்கள் உண்மையாகும் படச்த்தில் சாம்சங் நிறுவனம் போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்த உதவும். 2020 மற்றும் 2021 வாக்கில் போல்டபில் ஸ்மார்ட்போன் சந்தை 264 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. 

இதையும் படியுங்கள்: ரூ. 49 விலையில் புது சலுகை.... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வி நிறுவனம்..!

2025 வாக்கில் போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்கள் எண்ணிக்கை 27.6 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இது 2020 ஆண்டில் இருந்து 2025 ஆண்டில் 69.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கும் என ஐடிசி கணித்து இருக்கிறது. 2022 ஆண்டு முதல் முறையாக போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்கள் வளர்ச்சி 571 சதவீதம் என அசுர வளர்ச்சியை பதிவு செய்தது. 

தற்போது சாம்சங் நிறுவனம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஒப்போ, விவோ, சியோமி, மோட்டோரோலா மற்றும் ஹூவாய் உள்ளிட்டவைகளை போல்டபில் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் எதிர்கொண்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் உயர் ரக போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!