WhatsApp Update: இனி நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்!!

By Dinesh TGFirst Published Oct 10, 2022, 9:39 PM IST
Highlights

வாட்ஸ்அப்பில் தற்போது புதிதாக 3 விதமான அப்டேட்டுகள் வரவுள்ளன. இவை அனைத்தும் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் வகையில் வருகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் வாட்ஸ்அப்பில் வரவிருக்கும்புதிய அப்டேட்டுகள் குறித்து பேசினார். ஸ்கிரீன் ஷாட்களை எடுக்க முடியாதபடி செய்தல்,  கடந்தகால பங்கேற்பாளர்கள் மற்றும் ஆன்லைன் நிலையை தடுப்பது உட்பட வாட்ஸ்அப்பிற்கான மூன்று புதிய தனியுரிமை அம்சங்கள் வெளியிடப்பட்டன.

இப்போது, ​​WABetaInfo இன் அறிக்கையின்படி, வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை வெளியிடுவதாகத் தெரிகிறது, இது வாட்ஸ்அப் குழுவில் 1024 பேர் வரையில் சேர்த்துக்கொள்ளலாம் என்ற வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிலுவையில் உள்ள குழு பங்கேற்பாளர்களின் பட்டியலையும் உருவாக்கலாம்.

வாட்ஸ்அப் குழுவில் 1024 பேர்: 

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் வெளியான பீட்டா வெர்ஷனில 512 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கும் அம்சம் வெளியடப்பட்டது, தற்போது வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர்களின் எண்ணிக்கை வரம்ப  மேலும் 1024 பேர் வரையில் உயர்த்த WhatsApp தேர்வு செய்துள்ளது. அதாவது இனி வாட்ஸ்அப் குழுவில் 1024 பேர் வரையில் சேர்த்துக் கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராமிலும் ஹேக்கிங் கும்பல்.. உஷாரய்யா உஷாரு !

இந்தச் செயல்பாட்டை Android மற்றும் iOSக்கான WhatsApp பீட்டாவில் அணுகலாம்; இருப்பினும், இது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பீட்டா வெர்ஷனை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இந்த அம்சம் செயலில் உள்ளதா என்பதைப் பார்க்க, ஒரு குழுவை உருவாக்கவும் அல்லது வாட்ஸ்அப்பில் ஏற்கனவே உள்ள ஒன்றில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும். அப்போது, உங்கள் கணக்கிற்கு அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை வரம்பை நீங்கள் பார்க்கலாம்.

நிலுவையில் உள்ள பங்கேற்பாளர்கள்

சமீபத்தில் வாட்ஸ்அப்பின் பீட்டா பதிப்பு 2.22.21.74 மற்றும் TestFlight பில்ட் 22.21.0 (406671622) வெளியானது. அதன்படி,  நிலுவையில் உள்ள குரூப் உறுப்பினர்களின் பட்டியலை, அட்மின்கள் பார்க்கும்படி புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.  

WhatsApp பயன்படுத்த வேண்டாம்! Telegram நிறுவனர் கடும் எச்சரிக்கை

அதாவது, ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேருவதற்கு பயனர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், அந்த கோரிக்கையை நிலுவையில் வைத்திருக்கவும், அவ்வாறு நிலுவையில் உள்ளவர்களின் பட்டியலை எளிதில் பார்க்கவும் முடியும். மேலும், எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு குழுவில் சேருவதற்கான அனுமதி அளிக்கவும் முடியும்.  விரைவில் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!