
போட்டி நிறுவனங்களான அமேசானும் பிளிப்கார்ட்டும் பண்டிகை காலங்களை முன்னிட்டு ஏராளமான சலுகைகளை வழங்குவதாக விளம்பரங்களை குவித்தது. ஆனால் அறிவித்தது போல சலுகைகளை பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கவில்லை.
இதனால் இதன் வாடிக்கையாளர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளானர். மேலும், இதனை பாய்கார்ட் பிளிப்கார்ட் என்று முழக்கங்களை எழுப்பி பிளிப்கார்ட்டை புறக்கணிப்போம் என்று டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.. இந்த ஏமாற்றத்தில் இருந்து இதன் வாடிக்கையாளர்கள் இன்னும் மீளாத நிலையில் தற்போது தீபாவளி சேல்ஸை ஃபிளிப்கார்ட் தொடங்கியுள்ளது. அதன்படி, பிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ் நாளை அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 16 வரை நீடிக்கும் என அறிவித்து உள்ளது.
Amazon ஷாப்பிங்கில் மீண்டும் ஒரு சூப்பர் ஆஃபர்!
பிளஸ் மெம்பர்களுக்கு வழக்கம் போல ஒரு நாள் முன்பாகவே இந்த சலுகைகள் தொடங்கி விட்டது. கோட்டக் மற்றும் SBI வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உறுப்பினர்களுக்கு 10% உடனடி தள்ளுபடியை வழங்க உள்ளது. மேலும் பல்வேறு விதமான எக்ஸ்சேஞ்ச் ஆபர்களையும் அறிவித்து உள்ளது.
ஐ போனிற்கு இணையான கூகுள் பிக்சல் 6a வின் விலையானது ரூ. 27, 999 ஆகவும், சாம்சங் கேலக்சி z பிளிப் 3 இதன் விலை 50,000 ரூபாய் எனவும் அறிவித்து உள்ளது.
Amazon, Flipkart ஆஃபர்கள் இன்னும் எத்தனை நாள் இருக்கும்? வெயிட் பண்ணி வாங்கலாமா
மேலும், சாம்சங் S 22 பிளஸ் இதன் விலையானது 56,749 ரூபாயாக உள்ளது. இதைத்தவிர ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 9ஐ ,ரியல்மி 9 5ஜி, ரியல்மி 9 ப்ரோ பிளஸ் போன்ற மொபைல்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது பிளிப்கார்ட் நிறுவனம் நாடகம் நடத்தாமல், அறிவித்த சலுகைகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.