WhatsApp Update : பயனர்களின் மனதைக் கவர.... மாஸ்டர் பிளான் போட்ட வாட்ஸ் அப் - விரைவில் வருகிறது புதிய அப்டேட்

By Ganesh Perumal  |  First Published Dec 24, 2021, 10:08 PM IST

வாட்ஸ் அப்பில் மிகவும் பிரபலமாக விளங்கும் எமோஜிகளில், பயனர்களை கவரும் விதமாக அடுத்த அப்டேட் வெளியிடப்பட உள்ளதாம். 


இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பல கோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக இருந்து வருகிறது வாட்ஸ்அப். வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.  

வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் நோக்கிலும் பயனாளிகளை கவரும் விதத்திலும் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ் அப் செயலியில் விரைவில் வரவிருக்கும் ஒரு முக்கிய அப்டேட் குறித்து தற்போது பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

வாட்ஸ் அப்பில் மிகவும் பிரபலமாக விளங்கும் எமோஜிகளில் தான் அடுத்த அப்டேட் உள்ளதாம். அதன்படி இதய வடிவில் கலர்கலரான அனிமேட்டட் எமோஜியை வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இதற்கான சோதனை நடைபெற்று வருகிறதாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐ ஓஎஸ் இயங்கு தளங்களங்களில் இந்த அப்டேட் வழங்கப்பட இருக்கிறதாம்.

தற்போது இந்த எமோஜி சிவப்பு நிறத்தில் மட்டும் இருக்கும் நிலையில், விரைவில் ஆரஞ்ச், பச்சை, மஞ்சள், கருப்பு, பர்புல் ஆகிய நிறங்களில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ் அப்பின் இந்த அப்டேட் ரசிகர்களை நிச்சயம் கவரும் வண்ணம் இருக்கும் என கூறப்படுகிறது.

click me!