கூகுள் நிறுவனம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தனது முக்கிய புராடெக்ட்டின் விற்பனையை நிறுத்தி உள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் ‘ஹோம் மினி’ (Home Mini) என்கிற ஸ்மார்ட் ஸ்பீக்கரை கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர், 2018ம் ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கூகுள் ஹோம் மினி (Home Mini) ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் எதிரொலியாக இந்த மாடல் கூகுள் ஸ்டோர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
undefined
கூகுள் ஸ்டோர் தளத்தில் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை தேடினால், இனி எப்போதும் கிடைக்காது என காண்பிக்கிறது. மேலும் கூகுள் தேடலில் இந்த ஸ்பீக்கரை விற்பனை செய்வதை குறிக்கும் பதில்கள் எதுவும் பட்டியலிடப்படவே இல்லை.
இதன்மூலம் கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரின் விற்பனை நிறுத்தப்பட்டது உறுதியாகி உள்ளது. எனினும், இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் 3-ம் தரப்பு விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.
அதன்படி இந்தியாவில் கூகுள் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரின் சால்க் (Chalk) நிற வேரியன்ட் பிளிப்கார்ட் தளத்தில் ரூ. 2,745 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இதன் சார்க்கோல் (Charcoal) பிளாக் மற்றும் கோரல் (Coral) நிற வேரியன்ட் விலை முறையே ரூ. 2,898 மற்றும் ரூ. 4,899 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.