Bulletproof iPhone : வந்தாச்சு புல்லட்புரூஃப் ஐபோன்.... விலை தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

By Ganesh Perumal  |  First Published Dec 18, 2021, 9:59 PM IST

துப்பாக்கி தோட்டாக்களை தடுத்து நிறுத்தும் அளவு உறுதித்தன்மை கொண்டவையாக ஐபோன் 13 ப்ரோ மாடலை கேவியர் நிறுவனம்  மாற்றியமைத்து உள்ளது.


கேவியர் நிறுவனம், முன்னணி போன் தயாரிப்பு நிறுவனங்களின் மொபைல்களை மாற்றியமைத்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரு மாடல்களில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு உள்ளது. அதன்படி இந்த மாற்றியமைக்கப்பட்ட மாடல்கள் ஸ்டெல்த் 2.0 என அழைக்கப்படுகின்றன. 

Tap to resize

Latest Videos

கேவியர் நிறுவனத்தின் ஸ்டெல்த் 2.0 சீரிஸ் ஐபோன்கள் பி.ஆர்.2 கிளாஸ் 2 புல்லட்புரூஃப் ஆர்மர் கொண்டுள்ளது. துப்பாக்கி தோட்டாக்களை தடுத்து நிறுத்தும் அளவு உறுதித்தன்மை கொண்டவையாக இது மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. பி.ஆர்.2 கிளாஸ் 2 புல்லட்புரூஃப் ஆர்மரை NPO TCIT எனும் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த நிறுவனம் புல்லட்புரூஃப் உடைகள், பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் போர் ஹெலிகாப்டர்களை உருவாக்கி வருகிறது.

ஸ்டெல்த் 2.0 மாடல்களில் எந்த கேமராவும் இருக்காது என கேவியர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் இந்த போன்களை பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

புல்லட் புரூஃப் போன் என்ற பெயருக்கு ஏற்றார் போல் தோட்டாக்களை உண்மையில் தடுத்து நிறுத்துகிறது. எனினும், தோட்டாக்களை எதிர்கொண்ட பின் இந்த போன் செயலற்று போய்விடுகிறது. போன் செயலற்று போனாலும், துப்பாக்கி சூட்டில் இருந்து ஒருவரின் உயிரை காப்பாற்றுகிறது என்றால் இது வரவேற்கத்தக்க கண்டுபிடிப்பு தான். 

இந்த போனின் துவக்க விலை இந்திய மதிப்பில் ரூ. 4.85 லட்சம் எனவும், இதன் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 6.07 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போன் மொத்தம் 99 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளதாம். 

click me!