வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அவ்வப்போது அதிரடி சலுகைகளை வழங்கும் ஜியோ(JIO) நிறுவனம், புதிதாக 1 ரூபாய் பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ (JIO), அண்மையில் தனது அனைத்து பேக்குகளின் கட்டணங்களையும் உயர்த்தியது. இந்த விலை உயர்வு டிசம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், அந்நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ஜியோ நிறுவனம், புதிதாக 1 ரூபாய் பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த 1 ரூபாய் பேக் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இதில் 100 எம்.பி அதிவேக டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த 100 எம்.பி முடிவடையும் பட்சத்தில், இணைய சேவையின் வேகம் 64 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மை ஜியோ செயலியில் உள்ள ரீசார்ஜ் (Recharge) ஆப்ஷன் சென்று ‘வேல்யூ‘ (Value) என்கிற செக்ஷனை கிளிக் செய்து அதில் உள்ள அதர் பிளான்ஸ் (Other Plans) என்கிற பகுதியில் ரூ. 1 சலுகையை பெறலாம்.
இந்த சலுகை ஒரு நம்பருக்கு 10 முறை வழங்கப்படுமாம். இதன்மூலம் ஒருவர் 10 ரூபாய் செலவழித்து 1 ஜி.பி டேட்டாவை பெற முடியும். இதுவரை எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இப்படி ஒரு சலுகையை வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.