BMW : இந்தியாவில் அறிமுகமானது பி.எம்.டபிள்யூ எலெக்ட்ரிக் கார்... விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Ganesh Perumal  |  First Published Dec 13, 2021, 10:00 PM IST

பி.எம்.டபிள்யூ நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த காரின் விலை மற்றும் அதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.


சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான பென்ஸ், ஜாகுவார், ஆடி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திவிட்டன. அந்த நிறுவனங்களுக்கு இணையான மற்றொரு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ, தனது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது அந்நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த காரில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

Latest Videos

undefined

பி.எம்.டபிள்யூ நிறுவனம் iX xDrive 40 எனும் எலெக்ட்ரிக் கார் வேரியண்டை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார், 326 பி.ஹெச்.பி. திறனுடன் இயங்கக்கூடியதாகும். மேலும் இந்த கார் 630 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்த செய்கிறது. இதனால் பூஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை 6.1 விநாடிகளில் எட்ட முடியுமாம். 

இந்த வகை காரில் 76.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 425 கி.மீட்டர் தூரம் வரை செல்ல முடியுமாம். இந்த மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.1.16 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

click me!