கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளே கேம்ஸ் செயலி விண்டோஸ் 10 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்த முடியுமாம்.
ஆண்ட்ராய்டு கேம்களை ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் மட்டுமே விளையாட முடியும், விண்டோஸ் இயங்குதளங்களில் விளையாட முடியாத வகையில் இருந்தது. இந்நிலையில், அடுத்தாண்டு முதல் விண்டோஸ் இயங்குதளங்களிலும் ஆண்ட்ராய்டு கேம்களை விளையாடும் வசதியை கொண்டுவர கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கென பிரத்யேகமாக கூகுள் பிளே கேம்ஸ் என்கிற செயலியை கூகுள் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது அறிமுகமான பின் கூகுள் பிளேவில் உள்ள கேம்களை விண்டோஸ் லேப்டாப், டேப் மற்றும் கணினிகளிலும் விளையாட வழிவகை செய்யும்.
undefined
இந்த அம்சம் வழங்கப்பட்டால் போன், குரோம்புக், டேப் மற்றும் விண்டோஸ் கணினிகளிடையே சீம்லெஸ் ஸ்விட்ச் செய்ய முடியும். அதாவது ஒரு சாதனத்தில் விளையாடிய கேமினை, விட்ட இடத்தில் இருந்து மற்றொரு சாதனத்தில் விளையாட முடியும் என கேம்களுக்கான ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் பிளே இயக்குனர் கிரெக் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளே கேம்ஸ் செயலி விண்டோஸ் 10 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்த முடியுமாம். தற்போது இந்த செயலிக்கான டீசரை கூகுள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. விரைவில் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.