
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம் செயலி, உலகம் முழுவதும் பல கோடி பயனர்களை கொண்டதாகும். உலகின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு செயலியாகவும் இன்ஸ்டாகிராம் உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர் அதில் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் 'டேக் ஏ பிரேக்' (Take a Break) என்கிற புதுஅம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ச்சியாக அதிக நேரம் இந்த செயலியை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் இடையிடையே சிறிது நேரம் மற்ற பணிகளை செய்ய நினைவூட்டும் வகையில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
10, 20 அல்லது 30 நிமிடங்கள் என பயனர் விரும்பும் கால இடைவெளியில் நினைவூட்டியை செயல்படுத்தும் வசதி இதில் இடம்பெற்றுள்ளது. செட்டிங்ஸ் மூலம் இந்த அம்சத்தை செயல்படுத்த முடியும்.
இந்த அம்சத்தை முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.