விலையுயர்ந்த தொழில்நுட்ப சாதனங்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம், அடுத்தாண்டு மூன்று ஐபேடு மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாம்.
தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இருப்பது ஆப்பிள். தொழில்நுட்பத்தில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இந்நிறுவனம், அடுத்தாண்டு மேலும் பல புதிய சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி ஆப்பிள் நிறுவனம் அடுத்தாண்டு மூன்று புதிய ஐபேடு மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் iPad Air 5, iPad 10 மற்றும் iPad Pro ஆகிய மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
குறிப்பாக iPad Pro மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதன் செயல்திறனை அதிகரிக்கும் விதமாக 3 நானோமீட்டர் சிப்செட்டும் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் iPad Air 5 மற்றும் iPad 10 ஆகியவற்றில் iPad mini-யில் உள்ளது போல், A15 பயானிக் சிப்பும், 5ஜி கனெக்டிவிட்டியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதுதவிர மேலும் சில சிறப்பம்சங்களும் இந்த புதிய மாடல் ஐபேடுகளில் உள்ளதாகவும், அதனை ஆப்பிள் நிறுவனம் சஸ்பென்ஸாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.