Iphone : அட்ரா சக்க... ஆப்பிள் ஐபோனின் விலை ரூ.25 ஆயிரம் குறைப்பு - எந்த மாடலுக்கு தெரியுமா?

By Ganesh Perumal  |  First Published Dec 6, 2021, 9:44 PM IST

விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடலுக்கு அமேசான் தளத்தில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 


தொழில்நுட்பத்தில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தி தனக்கென தனி முத்திரை பதித்து இருக்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஐ-போன்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். ஆண்ட்ராய்டு போன்களை ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகமாக இருக்கும். 

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 புரோ மாடலுக்கு அமேசான் தளத்தில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தற்போது ஐபோன் 12 புரோ மாடலின் விலை ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை குறைப்பானது அனைத்து ஐபோன் புரோ வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 புரோ மாடலை கடந்தாண்டு அறிமுகம் செய்தது. ஐபோன் 12 புரோ 128 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ. 1,19,900 விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இதன் விலை ரூ.25 ஆயிரம் வீதம் குறைக்கப்பட்டு ரூ. 94,900 ஆக அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அதேபோல் 256 ஜிபி மாடலின் விலை ரூ. 99,900 ஆகவும், 512 ஜிபி விலை ரூ. 1,07,900 ஆகவும் மாற்றப்பட்டு இருக்கின்றன. 

click me!