Facebook Protect : ஹேக்கர்கள் ஊடுருவலை தடுக்க வந்தாச்சு புது திட்டம்.... அதிரடி காட்டும் பேஸ்புக்

By Ganesh Perumal  |  First Published Dec 5, 2021, 10:07 PM IST

Facebook Protect என்பது ஹேக்கர்களால் அதிக ஆபத்தில் உள்ள பயனர்களின் கணக்குகளை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.


முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக் (மெட்டா) நிறுவனம், அதிகம் ஆபத்துள்ள பயனர்களின் பேஸ்புக் கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த திட்டத்தின் பெயர் Facebook Protect. Facebook Protect என்பது ஹேக்கர்களால் அதிக ஆபத்தில் உள்ள பயனர்களின் கணக்குகளை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.

முதன் முதலாக இந்தத் திட்டமானது, கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் சோதிக்கப்பட்டது. பின்னர் 2020-ம் ஆண்டு அங்கு நடந்த தேர்தலில் பரவலாக விரிவுபடுத்தப்பட்டது.

Tap to resize

Latest Videos

தற்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் Facebook Protect திட்டம், இந்தியா உட்பட 50 நாடுகளுக்கு விரிவடையும் என கூறப்பட்டு இருக்கிறது. 

Facebook Protect அம்சம் அதிக ஆபத்தில் இருக்கும் பயனர்கள், அதாவது ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய துறைகளின் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக்கர்களிடம் சிக்காத வகையில் அதிக பாதுகாப்பை வழங்குகிறது. 
 

click me!