Moto G51 5G : பாஸ்ட் சார்ஜிங்.... குறைந்த விலையில் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது மோட்டோ G51 ஸ்மார்ட்போன்

By Ganesh Perumal  |  First Published Dec 10, 2021, 10:21 PM IST

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G51 5ஜி ஸ்மார்ட்போன் பிரைட் சில்வர், இண்டிகோ புளூ என இருவேறு நிறங்களில் கிடைக்கிறது. 


மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மிட்-ரேன்ஞ் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ G51 5ஜி என அழைக்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. பிராசஸர் கொண்டதாகும்.  ஸ்நாப்டிராகன் 480 பிளஸ் சிப்புடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

Tap to resize

Latest Videos

கேமராவை பொருத்தவரை 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் / டெப்த் கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 13 எம்.பி. செல்பி கேமரா ஆகியவை வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

ஹைப்ரிட் டூயல் சிம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளிட்டவையும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச் பேட்டரியுடன் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதி உள்ளது. 

புதிய மோட்டோ G51 5ஜி ஸ்மார்ட்போன் பிரைட் சில்வர், இண்டிகோ புளூ என இருவேறு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி ஆப்ஷன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

click me!