அமேசான் பிரைம் ஓடிடி தளம் சமீபத்தில் தனது சந்தா விலைகளை உயர்த்திய நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் விலை குறைப்பை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. இதன் காரணமாக புதிய படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டு வருகின்றன. அத்தகைய ஓடிடி தளங்களில் முன்னணியில் இருப்பது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம். இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் அதன் சந்தா விலைகளை திடீரென குறைத்துள்ளது.
முன்னதாக இந்த ஓடிடி தளத்தின் குறைந்தபட்ச சந்தா விலை ரூ.199 ஆக இருந்த நிலையில், தற்போது அதன் விலை ரூ.149-ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ரூ. 499 ஆக இருந்த பேசிக் பேக்கின் விலை தற்போது ரூ. 199 என குறைந்துள்ளது.
இதுதவிர ஸ்டாண்டர்டு பேக் விலை ரூ. 649-இல் இருந்து ரூ. 499 ஆகவும், பிரீமியம் பேக் விலை ரூ. 799-இல் இருந்து ரூ. 649 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரு மாத வேலிடிட்டி கொண்ட பேக்குகள் ஆகும்.
முன்பை விட 18 முதல் 60 சதவீதம் வரை விலைக் குறைப்பு செய்துள்ளது நெட்பிளிக்ஸ். சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளம் தனது சந்தா விலைகளை உயர்த்திய நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் விலை குறைப்பை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.