நியோ இ.டி.5 எலெக்ட்ரிக் கார் அறிமுகமானால் டெஸ்லாவின் மாடல் 3 எலெக்ட்ரிக் காருக்கு கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான நியோ, புதிய செடான் மாடல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து உள்ளது. இ.டி.5 என பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல் எலெக்ட்ரிக் கார்கள் 75, 100 மற்றும் 150 கிலோவாட் ஹவர் என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இதில் பேஸ் மாடலான 75 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர்களும், அதுவே 100 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 750 கிலோமீட்டர்களும் செல்லுமாம். இதன் ஹை எண்ட் மாடலான 150 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் வரை செல்லும் அளவு திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளதாம்.
undefined
சீனாவில் புதிய நியோ இ.டி.5 எலெக்ட்ரிக் காரின் விலை 51,476 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 38,90,594 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் விநியோகம் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.
டூயல் மோட்டார் செட்டப் உடன் இந்த கார் தயாரிக்கப்பட்டு உள்ளது. இவை இணைந்து 483 BHP திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்த கார் அறிமுகமானால் டெஸ்லாவின் மாடல் 3 எலெக்ட்ரிக் காருக்கு கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.