வாட்ஸ்அப்பில் Poll என்ற கருத்துக்கணிப்பு அம்சம் வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சோதிக்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு அப்டேட் சோதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு குழுவில் உள்ளவர்களிடத்தில் கருத்துக்கணிப்பு நடத்தலாம்.
இதன் மூலம், டூர் போலாமா, தியேட்டருக்கு யாரெல்லாம் வருகிறீர்கள், படம் பார்க்க போலாமா போன்றவற்றை கேட்பதற்கு குழுவில் உள்ள எல்லோரும் தனித்தனியாக மெசேஜ் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சாதாரணமாக படம் பார்க்க போலாமா என்று கேள்வி கேட்டு, அதற்கான பதில்களையும் WhatsApp Poll-ல் கொடுத்து விட வேண்டும். குழுவில் உள்ளவர்கள், அந்த பதில்களை கிளிக் செய்தாலே போதும்.
IRCTC: இனி Whatsapp மூலமாகவே ரயில்கள் வரும் நிலையம், வருகை நேரம், PNR ஸ்டேட்டஸ் அறிந்துகொள்ளலாம்!
இவ்வாறு வாட்ஸ்அப் குழுவில் உள்ள எவரும் Poll உருவாக்கி, அதில் 12 பேர் வரையில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், கருத்துக்கணிப்பில் யார் என்ன பதில் சொல்லியிருக்கிறார்கள் என்பதையும், Poll உருவாக்கியவர் பார்க்கலாம்.
Whatsapp வீடியோ காலில் புதிய வசதி!
இந்த புதிய அம்சமானது வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு 2.22.21.16 பதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உங்கள் வாட்ஸ்அப்பில் இந்தக் கருத்துக்கணிப்பு உள்ளதா என்று பார்க்கலாம்.
முன்னதாக வாட்ஸ்அப்பில் Call Link அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, கூகுள் மீட், ஜூம் மீட்டிங் ஆகியவற்றில் அழைப்பு இணைப்புகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து, மற்றவர்களையும் மீட்டிங்கில் பங்கேற்கச் செய்யலாம். அதே பேல், வாட்ஸ்அப் அழைப்பிலும் இணைப்புகளை உருவாக்கி கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு மற்றவர்களையும் அழைக்கலாம்.
வாட்ஸ்அப்பில் தொடர்ந்து வரும் அப்டேட்டுகள், பயனர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.