5g தொழில்நுட்பம் பயன்படுத்தி டெல்லியில் இருந்து ஸ்வீடனில் கார் ஓட்டினார் பிரதமர் மோடி!!

By Thanalakshmi V  |  First Published Oct 1, 2022, 3:25 PM IST

இந்தியாவில் இன்று முதல் 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் நடந்த இந்த அறிமுக விழா நடைபெற்றது. 


இந்தியாவில் இன்று முதல் 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் நடந்த இந்த அறிமுக விழா நடைபெற்றது. மாநாட்டில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர். பிரதமர் மோடி அவற்றை அனுபவித்து கண்டுகளித்தார். 

அப்போது, 5ஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட AR, VR விர்ச்சுவல் ஹெட்செட், தொலைநிலையில் இயங்கும் கார் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்தினார். ஒரு இடத்தில் வைக்கப்பட்ட நிலையான கார் அமைப்பில் அமர்ந்து, அதோடு 5ஜியில் இணைக்கப்பட்டு, வேறு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அசல் காரை ஓட்டினார். 

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:இன்று 5ஜி சேவை அறிமுகம்.. Jio, Vi எல்லாம் வந்தாச்சு.. என்னாச்சு Airtel 5G

5ஜி அறிமுக விழாவில் பேசிய பிரதமர் மோடி, . முன்பு 1 ஜிபி டேட்டா 300 ரூபாய் என்று இருந்தது. ஆனால், இப்போது 1ஜிபி டேட்டா வெறும் 10 ரூபாயில் உள்ளது என்றார். மேலும்,  உலகிலேயே மலிவான விலையில் இணைய வசதி இந்தியாவில் தான் உள்ளது என்றும், இதுவே உலகநாடுகளுக்கு நாம் எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும் கூறினார்

2014ல் இந்தியாவில் 25 கோடி இணைய இணைப்புகள் இருந்ததாகவும், இன்று அந்த எண்ணிக்கை 85 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். கிராமப்புறங்களில் இருந்து அதிக இணையப் பயனாளர்கள் வருகிறார்கள். இணையம் மற்றும் அது சார்ந்த விஷயங்களில் புதிய பயனர்களும், பழைய பயனர்களும் எந்தளவு அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதில் 5ஜி முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறினார்.

தொலைத்தொடர்பில் எந்தவித இடையூறுமின்றி, அலைவரிசையில் தடுமாற்றமின்றி, அதிவேக டேட்டா பரிமாற்றத்தில் 5ஜி தயாரிப்புகள் இயங்கின. இப்போது நடைமுறையில் இருக்கும் 4ஜியின் வேகத்தைக் காட்டிலும், பன்மடங்கு வேகத்தில் 5ஜி செயல்படும். கிட்டத்தட்ட ஒரு நொடியில் 1ஜிபி வரையிலான டேட்டா பரிமாற்றம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: 5G Launch: அடுத்த ஆண்டிற்குள் கிராமங்கள் முழுவதும் 5ஜி கொண்டு வரப்படும்: முகேஷ் அம்பானி

click me!