WhatsApp Update: இனி யாரும் உங்க வாட்ஸ்அப்பை பார்க்க முடியாது!

By Dinesh TG  |  First Published Dec 22, 2022, 3:42 PM IST

வாட்ஸ்அப்பில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி உங்கள் வாட்ஸ்அப்பை யாராவது பயன்படுத்தினால்,  6 இலக்க பாதுகாப்பு குறியீடு இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.


வாட்ஸ்அப் செயலி இந்த ஆண்டு பல அம்சத்தை அறிமுகப்படுத்தியது. மிகமுக்கியமாக பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை அணுக முடியும் வகையில் அப்டேட் வழங்கப்பட்டது.  அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான பீட்டா அப்டேட்டில் கம்பேனியன் மோட் வெளியிட்டது. 

இந்த புதிய அம்சம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை மற்றொரு ஸ்மார்ட்போன் மூலம் உடனடியாக பார்க்க அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜ் தளமாக இருப்பதால், அதை வெறும் ஒரு சில சாதனங்களில் மட்டுமே பயன்படுத்துவதற்கு சிரமமாக இருக்கும். அந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் புதிய அம்சம் வந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதுதொடர்பாக WABetaInfo தளத்தில் சில விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த புதிய அம்சமானது, 6 இலக்க குறியீடு மூலம் உங்கள் WhatsApp கணக்கில் பாதுகாப்பாக லாகின் செய்ய உதவுகிறது. இன்னும் சொல்லப்போனால், OTP மூலம் லாகின் செய்வது போன்ற அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

WhatsApp Update: மாத்தி மெசேஜ் அனுப்பிட்டேங்களா? இனி கவலை வேண்டாம்!

எனவே, நீங்கள் வாட்ஸ்அப்பில் லாகின் செய்யும் ஒவ்வொரு முறையும் 6-இலக்க OTP பெறுவீர்கள். இந்த 6 இலக்க OTP குறியீட்டைப் பெற பல வழிகளும் வழங்குகிறது - அதாவது, வாட்ஸ்அப் செயலி மூலமான OTP, மெசேஜ் வழியான OTP, வாய்ஸ்கால் மூலமான OTP.

உங்கள் வாட்ஸ்அப் இருக்கும் மெயின் ஸ்மார்ட்போனில் நீங்கள் பெற்ற 6 இலக்க உள்நுழைவுக் குறியீட்டை உள்ளிட்டதும், உங்கள் WhatsApp கணக்கை வேறொரு சாதனத்தில் அணுக முடியும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஒரு சில பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த அம்சம் குறித்து WhatsApp அதிகாரப்பூர்வமாக எதையும் வெளியிடவில்லை, இருப்பினும் பாதுகாப்பு அப்டேட் மிகவிரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!