வாட்ஸ்அப் தளத்தில் இருந்து சுமார் 37 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில் புகார்கள் வருவதற்கு முன்பாகவே கிட்டத்தட்ட 9,90,000 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் தரப்பில் நவம்பர் மாதத்தில் தடை செய்யப்பட்ட கணக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த வாட்ஸ்அப் கணக்குகள், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் நடத்தை) விதிகள், 2021 இன் விதி 4(1)(d) இன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரையில் சுமார் 37 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடைசெய்துள்ளதாக கூறப்படுகிறது. இது அக்டோபர் மாதத்தில் தடை செய்யப்பட்ட கணக்குகளை விட அதிகமாகும்.
இந்த நவம்பரில் தடை செய்யப்பட்டுள்ள 37 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளில், சுமார் 990,000 கணக்குகள் புகார்கள் வருவதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் லட்சக்கணக்கான கணக்குகளை தடை செய்தது குறித்து வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளர். அவர் கூறுகையில், “வாட்ஸ்அப் நிறுவனம் விதிமீறல் நடவடிக்கைகளை தடுப்பதில் முன்னணியில் உள்ளது, End to End என்ற என்கிரிப்ட் செய்யப்பட்ட மெசேஜ் தளமாக செயல்படுகிறது.
பல ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நவீன தொழில்நுட்பம், தரவு விஞ்ஞானிகள் என பல வகைகளில் எங்கள் பயனர்களைப் தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் செயல்படுகிறோம்” இவ்வாறு வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். வாட்ஸ்அப்பில் தீங்கு விளைவிக்கும் நடத்தையைத் தடுக்க தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணர்களை வழிவகை செய்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
WhatsApp Update: மாத்தி மெசேஜ் அனுப்பிட்டேங்களா? இனி கவலை வேண்டாம்!
2022 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தையில் உள்ள பயனர்களுக்காக வாட்ஸ்அப் நிறுவனம் பல தனியுரிமை தொடர்பான அம்சங்களை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக ஆன்லைன் நிலையை மறைத்தல், குழுக்களில் நிர்வாகக் கட்டுப்பாடு, குரூப்பில் இருந்து வெளியேறுதல், குரூப்பை மியூட் செய்தல் என பல உள்ளன. அவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்று, பயனர்கள் தங்கள் ஆன்லைன் இருப்பை முழுவதுமாக மறைக்க அனுமதிக்கும் வசதியாகும்.