Airtel 5G மேலும் 3 நகரங்களில் விரிவாக்கம்! உங்கள் பகுதியில் எப்போது Airtel 5G கிடைக்கும்?

By Dinesh TGFirst Published Dec 22, 2022, 2:45 PM IST
Highlights

ஏர்டெல் 5ஜி பிளஸ் இப்போது அகமதாபாத், காந்திநகர் மற்றும் இம்பாலில் கிடைக்கிறது. தற்போது எங்கெங்கு ஏர்டெல் 5ஜி கிடைக்கிறது, அடுத்ததாக எங்கு விரிவுபடுத்தப்படும் என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
 

பார்தி ஏர்டெல் நிறுவனம் 5ஜி நெட்வொர்க் சேவைகளை நாடு முழுவதும் வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. NSA என்ற முறையிலான தொழில்நுட்பத்தில் 5ஜியை சேவையை வழங்குகிறது.இந்தியாவில் வணிகரீதியாக 5ஜியை அறிமுகப்படுத்திய முதல் டெலிகாம் ஆபரேட்டர் ஏர்டெல் ஆகும். இந்த நிலையில், தற்போது இம்பால், அகமதாபாத் மற்றும் காந்திநகர் ஆகிய இடங்களில் 5ஜி அறிமுகம் செய்துள்ளது. 

அகமதாபாத் மற்றும் காந்திநகரில் ஏர்டெல் 5ஜி

அகமதாபாத் மற்றும் காந்திநகரில் அதிவேக 5G சேவைகளை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. SG நெடுஞ்சாலை, மேம்நகர், சேட்டிலைட், நவரங்புரா, சபர்மதி, மோடேரா, சந்த்கேடா, சவுத் போபால், கோம்திபூர், மெம்கோ, அகமதாபாத்தில் உள்ள பாபுநகர் மற்றும் கோபா, ரேசன் ஆகிய இடங்களில் 5ஜி இணைப்பு கிடைக்கும் என்று அறிவித்தது. சர்காசன், பெத்தாபூர் மற்றும் காந்திநகர் நகரத்தில் உள்ள முக்கிய இடங்களிலும் ஏர்டெல் 5ஜி கிடைக்கிறது. 

இம்பால் முழுவதும் உள்ள பகுதியிலஇலம் ஏர்டெல் 5ஜி கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, , அகம்பாட் பகுதி, போர் கல்லறை, டெவ்லாலாண்ட் பகுதி, தக்யல்பட் பகுதி, RIMS இம்பால் பகுதி, புதிய செயலகம், பாபுபாரா பகுதி, நகரம், காரி, யூரிபோக், சாகோல்பாண்ட் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் இப்போது 5G செயல்படுவதாக அறிவித்தது.

முன்னதாக நவம்பரில், தொலைத்தொடர்பு ஆபரேட்டர் குவஹாத்தியில் அதன் 5G விரிவாக்கத்தை அறிவித்தது, இது நாட்டின் வடகிழக்கு பகுதியில் முதன்முதலாக 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏர்டெல் 5ஜி பிளஸ் செயல்படும் அனைத்து நகரங்களின் பட்டியல்:

ஹைதராபாத், சென்னை, டெல்லி, மும்பை பெங்களூரு  சிலிகுரி, நாக்பூர், வாரணாசி, பானிபட் , குருகிராம், கவுகாத்தி, பாட்னா, லக்னோ, சிம்லா, இம்பால், அகமதாபாத், காந்திநகர்

ஏர்டெல்லின் போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பீட்டா கட்டத்தில் அதன் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இது ஜியோ ட்ரூ 5ஜி ஆகும். இந்த சோதனை எப்போது முடிக்கும் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. 

ஐபோன்களில் 5ஜி ரெடி! உங்கள் ஐபோனில் Airtel, Jio 5G ஆன் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போனில் Airtel 5G உடன் இணைப்பது எப்படி

உங்கள் Android மொபைலில் Airtel 5G ஐப் பயன்படுத்த, அமைப்புகள்> நெட்வொர்க் பயன்முறை> நெட்வொர்க் பயன்முறையைத் தேர்ந்தெடுத்து 5G இணைப்பு அல்லது GLOBAL என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

iOS தளத்தைப் பொறுத்தவரையில், அமைப்புகளுக்குச் சென்று, பொது > மென்பொருள் புதுப்பிப்பு > பதிவிறக்கம் செய்து iOS 16.2 ஐ நிறுவவும் என்பதை கிளிக் செய்யவும். அடுத்து, நெட்வொர்க் அமைப்புகளுக்குச் சென்று ஏர்டெல் சிம் கிளிக் செய்து 5ஜி சேவைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

click me!