delete messages for everyone… குரூப் அட்மின்களுக்காக சூப்பர் அப்டேட்… Whatsapp அசத்தல்!!

By Narendran S  |  First Published Jan 30, 2022, 7:05 PM IST

வாட்ஸப்  குரூப் அட்மின் அனைவருக்கும் செய்திகளை நீக்க அனுமதிக்கும் delete messages for everyone அம்சத்தை விரைவில் பெறுவதற்கான சோதனை முயற்சியில் இருப்பதாக பிரபல வாட்ஸப் பீட்டா தெரிவித்துள்ளது. 


வாட்ஸப்  குரூப் அட்மின் அனைவருக்கும் செய்திகளை நீக்க அனுமதிக்கும் delete messages for everyone அம்சத்தை விரைவில் பெறுவதற்கான சோதனை முயற்சியில் இருப்பதாக பிரபல வாட்ஸப் பீட்டா தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க வாட்ஸப் செயலி பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரபல மேட்டா (ஃபேஸ்புக்) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸப் தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. வாட்சப் நிறுவனமும் தங்களது பயனாளர்களுக்கென புதிய புதிய வசதிகளை ஆண்டுதோறும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வாட்ஸப்  குரூப் அட்மின் அனைவருக்கும் செய்திகளை நீக்க அனுமதிக்கும் delete messages for everyone அம்சத்தை விரைவில் பெறுவதற்கான சோதனை முயற்சியில் இருப்பதாக பிரபல வாட்ஸப் பீட்டா செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதன் மூலம் வாட்ஸப் குரூப்பில் இருக்கும் நபர்கள் யாரேனும் தேவையற்ற தகவலை குழுவில் பகிர்ந்தால் அதனை அந்த குழுவின் அட்மின் நீக்கலாம். அப்படி நீக்கப்பட்ட  செய்தி This was deleted by an admin என மற்றவர்களுக்கு தோன்றும். முன்னதாக தனிநபர்கள் அனுப்பும் செய்தியை அனுப்பிய நபர் 16 வினாடிகளில் நிரந்தரமாக நீக்குவதற்கான வசதிகளை வாட்ஸப் அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால்  வாட்சப் குழுவை பொருத்தவரையில் அட்மினால் ஒரு பயனாளரை புதிதாக சேர்க்கவோ, நீக்கவோ முடிந்ததே தவிர, அந்த குழுவில் பகிரும் தகவல்களுக்கு அவரால் பொறுப்பேற்க முடியாது. முன்னதாக சென்னை மற்றும் மும்பை உயர்நீதிமன்றங்கள் வாட்ஸப் குழுவில் பகிரப்படும் உள்ளடக்கத்திற்கு அட்மின் பொறுப்பாக மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

 

If you are a group admin, you will be able to delete any message for everyone in your groups, in a future update of WhatsApp beta for Android.

A good moderation, finally. pic.twitter.com/Gxw1AANg7M

— WABetaInfo (@WABetaInfo)

இந்த நிலையில் வாட்ஸ்அப் அட்மினுக்கு அதிகாரங்களை வழங்கும் பொருட்டு இந்த வசதி அறிமுகமாகவுள்ளது. தனிநபர் அனுப்பும் செய்தியை எப்படி குறிப்பிட்ட கால இடைவெளி கடந்தால் நீக்க முடியாதோ, அதே போலத்தான் பழைய செய்தி அல்லது கொடுக்கப்பட்ட  16 வினாடிகள் நேரம் கடந்த தேவையற்ற தகவல்களை குழு அட்மினாலும் நீக்க முடியாது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் WABetaInfo தகவலில் நம்பகத்தன்மை இருப்பதாக கருதப்படுகிறது. தற்போது சோதனை முயற்ச்சியில் இருக்கும் இந்த புதிய வசதி விரைவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!