சியோமி நிறுவனம் அடுத்த வாரம் இந்தியாவில் புதிய ரெட்மி ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சியோமி நிறுவனம் பிப்ரவரி 9 ஆம் தேதி ரெட்மி நோட் 11S, ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ போன்ற சாதனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், இதே நிகழ்வில் ரெட்மி ஸ்மார்ட் டி.வி. X43 மாடலை அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டுள்ளளது.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ரெட்மி ஸ்மார்ட் டி.வி. X50, X55 மற்றும் X65 போன்ற மாடல்களை சியோமி அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி டி.வி. X43 மாடலில் ஹெச்.டி.ஆர்., டால்பி விஷன், 30 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, ஃபிளாக்ஷிப் அனுபவம், பேட்ச்வால் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
ரெட்மி ஸ்மார்ட் டி.வி. X43 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 43-இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
- டால்பி விஷன், HDR 10+, HLG
- குவாட் கோர் மீடியாடெக் MT9611 (A55) பிராசஸர்
- மாலி G52 MP2 GPU
- 2GB ரேம்
- 16GB மெமரி
- ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
- வைபை, ப்ளூடூத் 5, 3 x HDMI 2.1 மற்றும் eARC
- 2 x யு.எஸ்.பி., ஆப்டிக்கல், AUX போர்ட், ஈத்தர்நெட்
- AV1, H.265, H.264, H.263, VP8/VP9. MPEG1/2 etc
- எம்.ஐ. வாய்ஸ் ரிமோட்
- 30W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டி.டி.எஸ். விர்ச்சுவல் X
- டால்பி அட்மோஸ்
புதிய ரெட்மி டி.வி. X43 மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் பிப்ரவரி 9 ஆம் தேதி நிகழ்வில் அறிவிக்கப்பட இருக்கின்றன.