கேலக்ஸி டூயல் ஃபோல்டு - இணையத்தில் லீக் ஆன சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள்

By Kevin Kaarki  |  First Published Jan 29, 2022, 3:57 PM IST

சாம்சங் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்குவதற்காக பல்வேறு காப்புரிமைகளை தொடர்ச்சியாக  பெற்று வருகிறது. அந்த வரிசையில், சமீபத்தில் நடைபெற்ற சி.இ.எஸ். நிகழ்வில் சாம்சங் தனது ஃபிளெக்ஸ் மடிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியது. 

இதுவரை கேலக்ஸி Z ஃபோல்டு மற்றும் கேல்கஸி Z ஃப்ளிப் என இருவித மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் சாம்சங் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் வசதியுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் சாம்சங்  கேலக்ஸி டூயல் ஃபோல்டு பெயரில் ஸ்மார்ட்போனை உருவாக்குவதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. தற்போது இந்த காப்புரிமை விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் புதிய சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி இது சாம்சங் நிறுவனத்தின் முதல் Z வடிவ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். 

இதில் எஸ் வைப்பதற்கான ஹோல்டர் உள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் இரண்டு ஹின்ஜ்கள் உள்ளன. இதனை மடிக்கும் போது ஸமார்ட்போனின் பின்புறத்தில் ஒரு பாதி ஸ்கிரீன் மீது இணைந்து கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் இரண்டு கட்-அவுட்-கள் உள்ளன. இவற்றுடன் ஸ்டைலஸ் ஒட்டிக் கொள்கிறது. புகைப்படங்களின் படி எஸ் பென் இவற்றின் நடுவே கச்சிதமாக பொருந்தி கொள்கிறது.

மேலும் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையிலும், எஸ் பென் கீழே விழாத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நோட் சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்றே இந்த மாடலில் இருந்தும் எஸ் பென் கீழ்புறமாக இழுத்து வெளியே எடுக்க முடியும்.

click me!