நத்திங் நிறுவனத்தின் இயர் 1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது முதல் விற்பனையில் நான்கு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
நத்திங் நிறுவனம் தனது முதல் சாதனத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. நத்திங் இயர் 1 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதலில் நத்திங் இயர் 1 மாடல் வெள்ளை நிறத்தில் டிரான்ஸ்பேரண்ட் கேசிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.
பின் சில மாதங்கள் கழித்து நத்திங் இயர் 1 மாடலின் பிளாக் நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனையில் நத்திங் இயர் 1 மாடல் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி மேலும் சில புதிய சாதனங்களை எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
undefined
சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இயர் 1 மாடல் இதுவரை நான்கு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரையில் ஒரு லட்சம் யூனிட்களை விற்று இருப்பதாக நத்திங் அறிவித்து இருந்தது. இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இந்நிறுவனத்தின் பிரபலத் தன்மையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
அந்த வகையில், நத்திங் நிறுவனம் மேலும் சில புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. எனினும், இவை பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளன. முன்னதாக வெளியான தகவல்களின் படி நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளை துவங்கி இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
நத்திங் இயர் 1 போன்றே அதன் ஸ்மார்ட்போன் மாடலும் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர நத்திங் நிறுவனம் குவால்காம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதால், நத்திங் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிதாக ஸ்மார்ட்போன் மட்டுமின்றி நத்திங் பவர் பேங்க், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பல்வேறு இதர சாதனங்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.