WhatsApp Outage: விரைவில் வாட்ஸ்அப் சரி செய்யப்படும்; மெட்டா நிறுவனம் அறிவிப்பு!!

By Dinesh TG  |  First Published Oct 25, 2022, 1:14 PM IST

மெட்டாவின் வாட்ஸ்அப் செயலி இன்று திடீரென முடங்கியுள்ளது. இந்த திடீர் முடக்கத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை சுமார் 500 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாதாரண அரட்டைகளுக்கு மட்டுமின்றி, அலுவல் சம்பந்தமான விஷயங்களிலும் வாட்ஸ்அப் முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் உயர்மட்ட அதிகாரிகள் வாட்ஸ்அப் குழு மூலமாகவும் பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மதியம் சுமார் 12.45 மணியளவில் வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. இதுகுறித்து டுவிட்டரில் வாட்ஸ்அப் நிறுவனத்தை டேக் செய்து பல பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.  குறிப்பாக #WhatsappDown என்ற ஹேஷ்டேக் குறியிட்டு பல பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் வேலைசெய்யவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். 

Tap to resize

Latest Videos

திடீரென ஏற்பட்ட இந்த முடக்கத்திற்கு, வாட்ஸ்அப் தரப்பில் உடனடி விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ்அப் முடங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வாட்ஸ்அப் விரைவில் சரிசெய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றும், திடீர் முடக்கத்திற்கான காரணம் தெரிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வாட்ஸ்அப் சரிசெய்யப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

click me!