Amazon Great Indian Festival, Diwali Sale ஆஃபர்கள் இன்று 23 ஆம் தேதியோடு நிறைவுபெறுகிறது. இந்த கடைசி நாள் தள்ளுபடி விற்பனையில் எந்தெந்த பொருட்களுக்கு நல்ல ஆஃபர்கள் உள்ளன என்பது குறித்து இங்குக் காணலாம்.
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தசரா பண்டிகை கால விற்பனை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அமேசானின் இந்த சிறப்பு ஆஃபர்கள் தீபாவளியோடு, அதாவது அக்டோபர் 23 ஆம் தேதியோடு முடிவடைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் மொபைல் போன்கள், ஸ்மார்ட் சாதனங்கள், லேப்டாப்கள், எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளுக்கு ஆஃபர்கள் உள்ளன. மேலும், EMI வசதிகள், Amazon Pay அடிப்படையிலான சலுகைகள் மற்றும் வங்கி பணப்பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கு கூடுதல் தள்ளுபடிகள் உள்ளன. குறிப்பாக Axis வங்கி மற்றும் ICICI வங்கி கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி 10% வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் சேல் 2022 ஆஃபரில் நல்லதொரு விலையில் கிடைக்கும் எலக்ட்ரானிக் கேஜெட்கள்:
OnePlus 10R 5G பிரைம் ஸ்மார்ட்போன்:
OnePlus 10R 5G பிரைம் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் ரூ.32,999 விலையில் விற்பனைக்கு வந்தது. இப்போது, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது . மேலும், ரூ. 28,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity8 8100-Max பிராாசர் மற்றும் 120Hz டைனமிக் ரெவ்ரெஷ் ரேட், 6.7-இன்ச் Full HD+ AMOLED டிஸ்ப்ளே உள்ளன.
Redmi 43-inch Smart Tv
ரெட்மி ஸ்மார்ட் டிவி x43 ஆஃபரில் 24,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. ICICI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ.1250 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். மேலும், ரூ.8050 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் ஆண்ட்ராய்டு 10 பதிப்பு, பேட்ச்வால் 4 UI உள்ளன. 30W ஸ்பீக்கர்கள் மற்றும் DTS virtualX மற்றும் Dolby Atmos வசதியும் உள்ளன.
OnePlus U சீரிஸ் 4K LED ஸ்மார்ட் டிவி:
OnePlus U சீரிஸ் 4K LED ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 69,999. இது தற்போது Amazon தளத்தில் 14% தள்ளுபடியுடன் 59,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ள அம்சங்கள்: 60 ஹெர்ட்ஸ் ரெவ்ரெஷ் ரேட், 65 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10 பதிப்பு, கூகுள் அசிஸ்டண்ட், 3 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள், 30வாட் ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளன.
Kindle Paperwhite (8 ஜிபி)
8ஜிபி ரேம் கொண்ட கின்டெல் பேப்பர் ஒயிட் தற்போது அமேசானில் ரூ.11,099க்கு கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.1250 வரை கேஷ்பேக் பெறலாம். EMI ஆப்ஷன் ரூ.3000 முதல் தொடங்குகிறது. Kindle Paperwhite ஆனது 6.8-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 330ppi க்ளேர்-ஃப்ரீ பேனலைக் கொண்டுள்ளது.
Airtel vs Jio vs Vi: எந்த நெட்வொர்க்கில் நல்ல ரீசார்ஜ் ஆஃபர் உள்ளது?
Fire TV Stick 4K Max
சாதாரண டிவியை 4K ஆண்ட்ராய்டு டிவியாக மாற்றக்கூடிய இந்தச் சாதனம் தற்போது வெறும் ரூ. 3699க்கு கிடைக்கிறது. கூடுதலாக Rupay டெபிட் கார்டு அல்லது Amazon Pay வாலட்டைப் பயன்படுத்தி கேஷ்பேக்கைப் பெறலாம். Fire TV Stick 4K Max ஆனது 4K வீடியோ ஸ்ட்ரீமிங்கை வழங்கும் திறன் கொண்டது மற்றும் Wi-Fi 6ஐ ஆதரிக்கிறது. இது Dolby Vision, HDR 10+ மற்றும் Dolby Atmos ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளன.