தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனவா, எந்த திட்டங்கள் சிறந்தவையாக உள்ளன என்பது குறித்து இங்குக் காணலாம்.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தொடர் பண்டிகை சீசனை முன்னிட்டு ஆஃபர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் அமேசான், பிளிப்கார்ட், ஜியோ மார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தாண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் ஆஃபர்கள் அறிவிக்கப்படவில்லை. மாறாக இந்தாண்டு 5ஜி சேவையே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகியவற்றில் எந்த ரீசார்ஜ் பிளான் சிறந்தவையாக உள்ளன என்பது குறித்து இங்குக் காணலாம்.
ஏர்டெல்:
ஏர்டெல் ரூ.209 திட்டத்தை வழங்குகிறது, இத்திட்டத்தின்படி நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை பெறலாம். இது 21 நாட்களுக்கு செல்லுபடியாகும். உங்களுக்கு அதிக டேட்டா தேவையில்லை என்றால் ஏர்டெல்லின் ரூ.155 மற்றும் ரூ.179 திட்டங்கள் முறையே 1 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டாவை 24 மற்றும் 28 நாட்களுக்கு வழங்குகிறது அதனை பயன்படுத்தலாம்.
ஏற்கனவே உங்களிடம் அன்லிமிடட் பிளான் இருந்தும், நீங்கள் அதிக டேட்டாவை பயன்படுத்த விரும்பினால், அதற்கான பூஸ்டர் பேக்குகளை தேர்வு செய்து கொள்ளலாம். ரூ.148க்கான திட்டம் 15 Gb கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. ரூ.118க்கான திட்டம் 12 Gb யும், ரூ.98 இற்கான திட்டம் 5Gb யும், ரூ.58க்கான திட்டம் 3Gb டேட்டாவையும் வழங்குகிறது.
உங்களுக்கு புடிச்ச ஆப்ஸை ரகசியமா பயன்படுத்தனுமா ? இதை ட்ரை பண்ணுங்க
ரிலையன்ஸ் ஜியோ:
ஜியோவில் 20 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.149 ரீசார்ஜ் பிளான் வழங்கப்படுகிறது. இது நாள் ஒன்றிற்கு 1 Gb டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடட் கால் வழங்குகிறது இதே பலன்களுடன் ரூ.179 மற்றும் ரூ.209 பிளான்கள், வீதம் 24 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
28 நாட்களுக்கு அன்லிமிடட் கால் மற்றும் 2 ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.155 மதிப்புள்ள திட்டமும் உள்ளது. அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு ஜியோ சில டேட்டா பூஸ்டர் திட்டங்களையும் வழங்குகிறது. அதன்படி, ரூ.25க்கு 2ஜிபி, ரூ.61க்கு 6ஜிபி மற்றும் ரூ.121க்கு 12ஜிபி வரையிலான ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன.
Fun பண்ணலாம் வாங்க.. அட்டகாசமான கூகுள் விளையாட்டு!
வோடபோன் ஐடியா:
வோடபோன் ஐடியா ரூ.269 திட்டத்தை வழங்குகிறது, இது பயனர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டா, 100 எஸ் எம் எஸ் மற்றும் அன்லிமிடட் கால் போன்றவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
அதே பலன்களுடன் ரூ.234 என்ற பிளான் 24 நாட்கள் வேலிடிட்டியுடனும், ரூ.199 என்ற பிளான் 18 நாட்கள் வேலிடிட்டியுடனும் வருகிறது. மேலும், 21 நாட்கள், 1ஜிபி டேட்டாவுடன் கூடிய ரூ.149 பிளான், 24 நாட்கள் 1 ஜிபி டேட்டாவுடன் கூடிய ரூ.155 பிளான், 28 நாட்கள் 4ஜிபி டேட்டாவுடன் கூடிய ரூ.209 பிளான் ஆகியவையும் உள்ளன.
கூடுதல் டேட்டா பூஸ்டர்களை தேடுபவர்களுக்கு, ரூ.151 திட்டத்தை Vi வழங்குகிறது. இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மெம்பர்ஷிப்புடன் 30 நாட்களுக்கு 8 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.82 பிளானில் 14 நாட்கள் வேலிடிட்டி, 4ஜிபி டேட்டா கிடைக்கிறது.