16 ஆப்களை முடக்கிய கூகுள்!

Published : Oct 22, 2022, 11:34 PM IST
16 ஆப்களை முடக்கிய கூகுள்!

சுருக்கம்

கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோரில் இருந்து 16 அப்ளிகேஷன்களை அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பயனர்கள் இந்த செயலிகளை வைத்திருந்தால் உடனே அன்-இன்ஸ்டால் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூகுளின பிளே ஸ்டோரில் இருந்து பேட்டரி, டேட்டாவை அதிகமாக விரயமாக்கும் செயலிகள் நீக்கப்பட்டுள்ளன ஆர்ஸ் டெக்னீஷியாவின் அறிக்கை படி, இந்த

ஆப்கள் McAfee ஆல் கண்டறியப்பட்டது. தற்போது அகற்றப்பட்ட இந்த ஆப்களின் பட்டியல் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது.

எந்த ஆப்ஸை கூகுள் அகற்றி உள்ளது ?

McAfee ஆல் கண்டறியப்பட்ட ஆப்களின் பட்டியல் : பூசன் பஸ், ஜாய்கோட், கரன்சி கன்வெர்ட்டர், அதிவேக கேமரா, ஸ்மார்ட் டாஸ்க் மேனேஜர், ப்லேஸ்லைட்  +, கே-டிக்ஸ்னரி, குயிக் நோட், EzDica, இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் டவுன்லோடர் ,  Ez நோட்ஸ் ஆகியவை ஆகும்.

இந்தப் ஆப்கள் பயனர்களின் சாதனத்தில் கூடுதல் கோடை இன்ஸ்டால் செய்து, விளம்பர மோசடிகளைச் செய்ய அனுமதிக்கிறது. இந்த ஆப்களில் சில com.liveposting என்ற Adware கோடிங் உடன் நிறுவப்படுவதாக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கோடிங்கானது ஒரு முகவர் போன்று செயல்படுவதாகவும், ஆட்வேர் சேவைகளை மறைமுகமாக இயக்குவதாகவும் கூறப்படுகிறது.

பிற ஆப்கள் com.click.cas  எனப்படும் கூடுதல் லைப்ரேரியினை கொண்டிருந்தன. இது  தானாக கிளிக் செய்ய வைக்கிறது. தங்களின் மோசடியான நடத்தையை மறைப்பதற்காக, லைப்ரேரியினை இயக்குவதற்கு முன், இந்த ஆப்ஸ் நிறுவப்பட்ட பிறகு சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தது செயல்படுவதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் 3 லட்சம் ஆப்பிள் நிறுவனத்தின் பணியாளர்களின் LinkedIn கணக்குகள் நீக்கம்!

முக்கியமாக, இது FCM செய்தி மூலம் வழங்கப்படும் வலைத்தளங்களைப் பார்வையிட்டு, பயனருக்குத் தெரியாமலே அவரது செயல்பாடுகளை உலாவுவதாக என்று McAfee நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் இந்த ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது. ஆர்ஸ் டெக்னீஷியாவிற்கு அளித்த அறிக்கையில், McAfee ஆல் புகாரளிக்கப்பட்ட அனைத்து பயன்பாடுகளும் அகற்றப்பட்டதை கூகுள் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

கூகுள் பிளே ப்ரொடக்டால் பயனர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த ஆப்கள் முடக்கப்பட்டுள்ளன" என்றும் கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். எனவே, பயனர்கள் மேற்கண்ட செயலிகளை தங்கள் போனில் இருந்து அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?