Twitter தளத்தில் ஷார்ட் வீடியோக்களுக்கான வசதி விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்திய தொழில்நுட்ப வரலாற்றில் ‘டிக்டாக்’ என்பது குறுகிய நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ அம்சத்தை கொண்டு வந்து, புரட்சியை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும், தற்போது Youtube தளத்திலும் ஷார்ட் வீடியோக்கள் பிரபலமாகி வருகின்றன. வெறும் 1 நிமிட வீடியோவில் மொத்த கருத்தும் சொல்லும் வகையில் இருப்பதால், ஷார்ட் வீடியோக்களுக்கு மவுசு அதிகம்.
இந்த நிலையில், டுவிட்டர் தளத்திலும் ஷார்ட் வீடியோக்கள் கொண்டுவரப்படும் என்று செய்திகள் வந்துள்ளன. டுவிட்டரில் ‘பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்’ என்ற பிரிவின் கீழ், இந்த ஷார்ட் வீடியோக்கள் இடம்பெறும் என்றும், ஸ்மார்ட்போனில் பார்ப்பதற்கு ஏதுவாக செங்குத்தாக வீடியோ அளவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Apple நிறுவனத்தை அசிங்கப்படுத்திய WhatsApp.. அப்படி என்ன ஆனது?
அதாவது கிட்டத்தட்ட டிக்டாக், யூடியூப் ஷார்ட் வீடியோக்களைப் போலவே டுவிட்டரிலும் விரைவில் ஷார்ட் வீடியோ அம்சம் வரவுள்ளது. முதற்கட்ட முயற்சியாக ஆங்கில மொழியிலும், அதன்பிறகு மற்ற மொழிகளிலும் ஷார்ட் வீடியோக்கள் கிடைக்கும்.
இதுதொடர்பாக டுவிட்டர் தரப்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, டுவிட்டரில் தங்களை யார் ‘டேக்’ செய்யலாம் என்ற தனிப்பட்ட உரிமை பயனர்களுக்கு வழங்கிடும் வகையில், இரண்டு அமைப்புகள் அப்டேட் விரைவில் வரவுள்ளது. இதைக் காட்டிலும் டுவிட்டரின் ஷார்ட் வீடியோக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தள்ளது.