இந்தியாவில் 5ஜி அமலுக்கு வந்துள்ள நிலையில், ஜியோ 5ஜி நெட்வொர்க்கை பெறுவதற்கு எந்தெந்த பிளான்கள் இருக்க வேண்டும் என்பது குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன.
இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய இடங்களில் ஜியோ நிறுவனம் சோதனை முறையில் 5ஜி சேவைகளை வழங்கி வருகிறது. அந்த இடங்களில் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்தும், 5ஜி கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், குறிப்பிட்ட பிளான்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே தற்சமயம் வரவேற்பு முறையில் 5ஜி சேவை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பின்வரும் பிளான்களில் இருந்தால், அவர்கள் ஜியோ 5ஜி சேவையை அனுபவிக்கலாம். அவை :
1. ரூ.399 திட்டம் :
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள், 1 Gbps வரையிலான அதிவேக இணையம் மற்றும் 5ஜி நெட்வொர்க்குடன் கூடுதலாக நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு இலவச சந்தா ஆகியவை கிடைக்கும். இதில் 75ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
2. ரூ.599 திட்டம்:
இத்திட்டத்தின் மூலம் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள், 1 Gbps வரையிலான அதிவேக இணையம் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் கூடுதலாக ஜியோ சிம் கிடைக்கும். இதில் 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
5ஜி சேவைக்கு எவ்வளவு ரூபாய் கட்டணம் வைக்கலாம்? கருத்துக்கணிப்பில் ஆச்சரிய முடிவு!
3. ரூ.799 திட்டம் :
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள், 1 Gbps வரையிலான அதிவேக இணையம் மற்றும் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும். இதில் 150 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
JioFiber பிளானில் ரூ.6,500 ஆஃபர்! இன்னும் எக்கச்சக்க சலுகைகள்!!
4. ரூ.999 திட்டம் :
இது மூன்று ஜியோ சிம்களுடன் கூடிய பேமிலி பிளான் ஆகும். இதில் அன்லிமிடட் வாய்ஸ் கால்கள், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில் 200 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
5. ரூ.1,499 திட்டம்:
இத்திட்டம் அன்லிமிடட் வாய்ஸ் கால்கள், இந்திய நெட்வொர்க்குகளுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் சர்வதேச அழைப்புகளை வழங்குகிறது. இதில் 300ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.