LinkedIn தளத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பணியாளர்கள் என்ற பெயரில் இருக்கும் போலி கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
Facebook, Twitter போல் LinkedIn என்பது தொழில்முறையான ஒரு சமூக இணைய பக்கமாகும். இந்த LinkedIn பக்கத்தில் இருந்து ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் என்று கூறிக்கொள்ளும் கணக்குகளின் எண்ணிக்கை ஒரே நாளில் பாதியாக குறைக்கப்பட்டது. எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறதா?
இதற்காக பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவு கொண்ட நிரல் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் LinkedIn தளத்தில் உள்ள போலி கணக்குகள் அகற்றப்பட்டுள்ளன. அதாவது, LinkedIn தளத்தில் 5,76,562 கணக்குகள் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுவதாக இருந்து வந்தது. ஆனால், ஒரே நாளில் இந்தக் கணக்குகளின் எண்ணிக்கை 2,84,991 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள 281,213 கணக்குகள் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களின் கணக்குகள் என்று கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1338 கோடி அபராதம்! மத்திய அரசு அதிரடி
ஆப்பிள் இன்சைடரின் அறிக்கையின்படி, உண்மையான பணியாளர்களின் சுயவிவர குறிப்புகளைப் பயன்படுத்தி, இவ்வாறாக போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலி சுயவிவர கணக்குகள் இருப்பது என்பது LinkedIn தளத்திற்கு புதிதல்ல. இதற்கு முன்பு இருந்தே போலி கணக்குகள் மூலம் மோசடி சம்பவங்கள் நடந்து வருகிறது, ஆனால், அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில், தற்போது AI Bot மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பெயரில் மட்டும் நடந்ததாக தெரியவில்லை. இதேபோல் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிவதாக 1.2 மில்லியன் கணக்குகள் இருந்ததாகவும், அவை களையபபட்டு தற்போது பணியுள்ள 838,601 கணக்குகள் மட்டும் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.