நீங்கள் தினமும் பயன்படுத்தும் கூகுளில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன. அவற்றில் டாப் 3 வேடிக்கைகளை இங்கே காண்போம்.
கூகுள் தேடுபொறி அம்சத்தை அனைவரும் தங்களுக்கு தெரியாத பல விஷயங்களை அறிந்துகொள்வதற்காகவே பயன்படுத்துவர். ஆனால் இதில் பொழுதுபோக்கிற்காக பல சுவாரஸ்யமான விஷயங்களும் உள்ளன என்பதை கவனித்ததுண்டா?
1. சாயத்தை ஊற்றி ஹோலி கொண்டாடலாம்:
undefined
இந்த அட்டகாசமான பொழுதுபோக்கினை அனுபவிக்க உங்கள் மொபைலின் கூகுள் பக்கத்தில் ஹோலி (Holi) என டைப் செய்யுங்கள். அதற்கான ரிசல்ட் பக்கத்தில் ஹோலி (Holi) என்றும், அதற்கு கீழ் பெஸ்ட்டிவிட்டி (festivity) எனவும் கிடைக்கும். அதற்கு அருகில் உள்ள மூன்று முக்கோணத்தை க்ளிக் செய்யுங்கள் .
பிறகு உங்கள் ஸ்க்ரீனில் நீங்கள் எந்த இடத்தை க்ளிக் செய்தாலும் கலர் கலர் ஹோலி கலர்பொடியை தூவி ஸ்கிரீனில் அடிக்கலாம். இதனை சுத்தம் செய்வதற்கு உங்கள் ஸ்க்ரீனில் உள்ள நீர் துளி போன்ற பட்டனை க்ளிக் செய்யவேண்டும். பிறகு அந்த கலர் அனைத்தும் மறைந்து முன்பு இருந்தது போன்று உங்கள் ஸ்க்ரீன் சுத்தமாகிவிடும்.
2. பிலேப்பி பேர்டு (Flappy bird) :
உங்கள் மொபைலின் கூகுள் பக்கத்தில் பிலேப்பி பேர்டு (Flappy bird) என டைப் செய்யவும். பிறகு https://poki.com/en/g/flappy-bird என்ற லிங்கிற்கு செல்லவும். இதன் மூலம் ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்த பிலேப்பி பேர்டு (Flappy bird) கேமை நீங்கள் விளையாடி மகிழலாம்.
உங்களுக்கு புடிச்ச ஆப்ஸை ரகசியமா பயன்படுத்தனுமா ? இதை ட்ரை பண்ணுங்க
3. பகடை விளையாடலாம் :
உங்களிடம் பகடை இல்லாத சமயத்தில் நீங்கள் பகடை விளையாட வேண்டும் என்று எண்ணினால் இதை செய்யுங்கள். உங்கள் மொபைலில் உள்ள கூகுள் பக்கத்தில் ரோல் எ டைஸ் (roll a dice) என டைப் செய்தால் வித விதமான வடிவங்களில் கலர் கலரான பகடைகள் உங்கள் ஸ்க்ரீனில் தோன்றும். அதனை வைத்து நீங்கள் விளையாடி மகிழலாம்.