தமிழகத்தில் Jio True 5G அறிமுகம்: வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் எச்சரிக்கை!

By Dinesh TG  |  First Published Oct 23, 2022, 11:33 PM IST

தமிழகத்தில் ஜியோ 5ஜி சேவை அறிமுகமான நிலையில், 5ஜியை வைத்து வரும் மோசடி மெசேஜ்களை குறித்து வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.


இந்தியாவில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை விரிவுபடுத்தும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்குள் முக்கிய நகரங்களில் அழைப்பு முறையில் 5ஜி சேவை வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி, தமிழகத்தில் நேற்று அக்டோபர் 22 ஆம் தேதி 5ஜி சேவை அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே 4ஜி சிம் கார்டை 5ஜி சிம் கார்டாக மாற்றித் தருவதாக எஸ்எம்எஸ் மூலம் மோசடி சம்பவங்கள் ஆங்காங்கு நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 5ஜி சேவையைப் பெறுவதற்கு தற்போதைக்கு சிம் கார்டை மாற்ற வேண்டியதில்லை என்று ஏர்டெல், ஜியோ இரு நிறுவனங்களும் கூறியுள்ளன. இருப்பினும், 5ஜி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள், இந்த 5ஜி சிம் கார்டு மோசடி வலையில் விழுந்து பணத்தைப் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Latest Videos

undefined

Youtube Shorts போல் Twitter தளத்திலும் விரைவில் ஷார்ட் வீடியோக்கள் அறிமுகம்!

இந்த நிலையில், ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ‘மேம்படுத்தப்பட்ட சேவைகளைப் பெறுவதற்காக, உங்கள் ஜியோ எண்ணின் சிம் கார்டை மாற்றச் சொல்லும் மோசடி செய்திகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்கவும். 
இ-மெயில் அல்லது எஸ்எம்எஸ் ஆகியவற்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் வந்தால் அவற்றைக் கிளிக் செய்ய வேண்டாம். OTP எண்கள், பணம் சம்பந்தப்பட்ட விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களைத் திருடுவதவற்காக, மோடிச் செய்பவர்கள் உங்கள் சாதனத்தை ஹேக் செய்யக்கூடும்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Airtel vs Jio vs Vi: எந்த நெட்வொர்க்கில் நல்ல ரீசார்ஜ் ஆஃபர் உள்ளது?

எனவே, வாடிக்கையாளர்கள் யாரும் எந்தவிதமான இணையதள இணைப்புகளையோ, ஓடிபி கேட்டு மெசேஜ் வந்தாலோ அவற்றை உடனடியாக நிராகரிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அதில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால், 1800 889 9999. என்ற எண்ணில் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்புகொண்டு உங்களுக்கு வந்துள்ள மெசேஜ் உண்மை தானா என்பதை உறுதிசெய்யவும்.

click me!