23 லட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம்! காரணம் என்ன?

By Dinesh TG  |  First Published Oct 3, 2022, 12:55 PM IST

வாட்ஸ் அப் நிறுவனம் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர் கணக்குகளை முடக்கி உள்ளது.


வாட்ஸஅப் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப சட்டம், 2021 ஆம் ஆண்டு விதிகளுக்கு இணங்க, அக்டோபர் மாதத்திற்கான பயனர் பாதுகாப்பு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

அதன்படி , கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 23 லட்சத்திற்கும் வாட்சப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் சுமார் 1,00,000 கணக்குகள் செயலில் உள்ளன.  அவ்வாறு வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கிய கணக்குகள் +91 என்ற எண்களில் இருப்பதால், அவை இந்தியாவில் பயன்படுத்தப்படும் கணக்கு என்பதை  நாம் அறியலாம். 

Latest Videos

undefined

67 ஆபாச இணையதளங்கள் முடக்கம், இதனால் என்ன பலன்?

இந்த அறிக்கையில் பயனர்களிடம் பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 23 லட்சம் கணக்குகளை முடக்கி உள்ளதாக வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

முன்னதாக வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் போலியான கணக்குகளை முடக்கியது. மேலும், 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், சமூக வலைதள புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட தொடங்கியது. 

வருகிறது Whatsapp Poll.. இனி குரூப்ல ஈஸியா கருத்துகணிப்பு கேட்கலாம்!

மேலும், வாட்ஸ்அப் கணக்குகள் தொடர்பாக இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 598 புகார்கள் குவிந்திருப்பதாகவும், அவற்றில்27 புகார்களுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

எண்ட் டு எண்ட்  அம்சத்தின் மூலம் முறைகேடுகளைத் தவிர்ப்பதில் வாட்ஸ் அப் நிறுவனம் முன்னிலை வகுக்கிறது. வாட்ஸ் அப் நிறுவனமானது பயனர்களின் பாதுகாப்பிற்காக பல ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!