ஹே சூப்பர் பா....”இனி ஜிமெயில் அட்டாச்மென்ட் வீடியோக்களை டவுன்லோட் செய்யாமலே பார்க்கலாம்”
தொழில் நுட்பவளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு நொடி பொழுதில் அனைத்தும் நம் கண் முன் கொண்டுவர முடியும்.
அதேபோன்று கூகிள் பொறுத்தவரை, ஜிமெயில் சேவை பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது . ஜிமெயில் வழியாக தான் இன்று அனைத்து விவரங்களும் முறையாக பகிர முடிகிறது. குறிப்பாக வியாபாரம் மற்றும் அலுவலக விவரங்கள் முதல் வேலை தேடுபவர்கள் வரை ஜிமெயில் மூலமாகத்தான் செயல்படுகிறது
ஜிமெயிலில் உள்ள அட்டாச்மென்ட் ஆப்ஷனில், வீடியோக்களை இணைக்கும் போது, அதனை டவுன் லோட் செய்தால் மட்டும் தான் முன்பெல்லாம் பார்க்க முடியும். ஆனால் தற்போது ஜிமெயில் புதிய அப்டேட் செய்தால், அட்டாச்மென்டில் உள்ள வீடியோக்களை டவுன் லோட் செய்யாமலேயே ப்ளே செய்து பார்க்க முடியும்
இந்த வசதி இன்னும் 15 நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
எப்படி பயன்படுத்துவது ?
இனி வீடியோ அட்டாச்மெண்ட் மெயிலில் டவுன்லோடு செய்யக் கோரும் பட்டன் அருகில் வீடியோ ஸ்ட்ரீம் செய்யக் கோரும் பட்டன் வழங்கப்படும். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி வீடியோக்களை டவுன் லோட் செய்யாமலேயே பார்க்கலாம் .
அதுமட்டுமில்லாமல், அவ்வாறு அனுப்பப்படும் வீடியோக்களின் அட்டாச்மென்ட் அளவு 5௦ எம்பியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு
ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான ஜிமெயில் செயலியில் பணம் அனுப்பும் வசதியும் உள்ளது.ஆனால் அமெரிக்காவில் மட்டும் தற்போது இந்த வசதியை கூகுள் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .