டைரி எழுதும் பழக்கம் உள்ளவர்கள் தான் வாழ்கையில் டென்ஷன் இல்லாத வாழ்கை வாழ்பவர்கள் .....ஏனெனில் நாளை என்ன செய்ய வேண்டும் என இன்றே தீர்மானித்து அதை குறித்து வைத்துக்கொண்டு, மறுதினம் அலுவலகத்திற்கு வரும் போது ரிலாக்ஸா வேலை செய்ய முடியும் .
ஒரு வேலை முடித்த பின்னர், அடுத்த வேலை என்ன செய்வது என்பது முதல் எல்லா குறிப்புகளையும் முன்னதாகவே குறிப்பு எடுத்துக் கொள்வதால், எந்த வேலையையும் தவற விடாமல் விரைவாக செய்து விட முடியும்.இதற்கு ரொம்ப முக்கியமாக இருப்பது நாம் பயன்படுத்தும் டைரி
ஆனால் டைரிக்கும் விடை கொடுக்கும் விதமாக, தற்போது ஒரு புதிய இணையதளம் “ டேபுக்.கோ” தொடங்கப் பட்டுள்ளது .
இதன் மூலம் , படிக்க வேண்டிய புத்தகங்கள், பார்க்க வேண்டிய திரைப்படங்கள், எந்த வேலை எப்பொழுது செய்ய வேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவலும் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
undefined
தேவைப்படும் போது இந்த இணையத்தை ஓபன் செய்து, நாம் ஏற்கனவே குறித்து வைத்துள்ள செயல்களை நினைவு கூறாலாம் .
அன்றாட வாழ்கையில் இந்த இணையதளம், அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தமாற்று கருத்தும் இருக்க முடியாது.
https://www.daybook.co/ இந்த லிங்க் ஓபன் பண்ணுங்க.. தேவையானதை நோட் செய்துகோங்க.....