ஜியோவிற்கு எதிராக பிஎஸ்என்எல் அதிரடி.... ஒரு நாளைக்கு 1 ஜிபி,அன்லிமிடட் கால்ஸ் ப்ரீ.....

 |  First Published Mar 16, 2017, 4:52 PM IST
bsnl offeres good data plan against jio



ஜியோவிற்கு எதிராக பிஎஸ்என்எல் அதிரடி...

ஜியோவிற்கு போட்டியாக தற்போது அனைத்து தொலைத்தொடர்பு  நிறுவனங்களும் திட்டம் போட்டு   சிலபல அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது .

Tap to resize

Latest Videos

இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சலுகையை வாரி வழங்குவதில் மும்முரம் காட்டி வருகிறது . அதன் படி,ரூ.399  செலுத்தினால், 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்ட  சேவைகளை  தங்கு தடையின்றி பெறலாம் என தகவல்  வெளியாகி உள்ளது

ரூ99 திட்டம்

அன்லிமிட்டெட் ஆன்-நெட் கால்ஸ்.  அதாவது  ஒரே நெட்வொர்க்களுடன் அழைப்பது கொள்ள முடியும்   மற்றும் 500 எம்பி டேட்டாவை  28 நாள்   கால அவகாசத்தில்  பயன்படுத்திக்கொள்ளலாம்

ரூ.339 திட்டம்

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது. இந்த  திட்டத்தில் பிஎஸ்என்எல் எண்களுக்கு மட்டுமே அன்லிமிடட் கால்ஸ் மேற்கொள்ள முடியும்.இதர  நெட்வொர்க் மொபைலுக்கு கால் செய்வதற்கு  ஒரு  நாளைக்கு 25 நிமிடங்கள் வரை பேச முடியும்.

இந்நிலையில் மார்ச் மாதத்திற்குள் இந்த திட்டத்திற்கு  ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு  தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஜியோவிற்கு சவால் விடும் வகையில் இருக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.   

 

 

click me!