
உங்களது ரகசியம் அபேஸ்...! நீங்கள் “வாட்ஸ் ஆப்பை” கணினியில் பயன்படுத்துகிறீர்களா..?
பாதுகாப்பானது என நம்பப்படும் என்க்ரிப்ஷன் வசதி கொண்ட செயலியை கூட ஹேக் செய்து , அதிலிருக்கும் தகவல்களை சுலபமாக எடுக்க முடியும் என செக் பாயிண்ட் மென்பொருள் டெக்னாலஜீஸ் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வாட்ஸ் ஆப் செயலியை , நாம் அலுவலகத்தில் இருக்கும் போதோ அல்லது நம் வீட்டில் பயன்படுத்தும் கணிணி பதிப்புகளில் உள்ள பிழை காரணமாக தற்போது 1௦௦ மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ் ஆப் அக்கவுண்ட்களை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது .
இதன் மூலம் ஒரு நபர் மற்றவர்களுக்கு அனுப்பிய செய்திகள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்க்க முடியும் என்றும் மேலும் அதன் மூலம் நம்முடன் தொடர்பில் இருக்கும் மற்றவர்களுக்கும் மால்வேர் மூலமாக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.