Volvo XC40 : 418 கி.மீ. ரேன்ஜ் கொண்ட எலெக்ட்ரிக் கார் அறிமுகம் - வால்வோ அதிரடி!

By Kevin Kaarki  |  First Published Mar 24, 2022, 5:16 PM IST

Volvo XC40 : வால்வோ இந்தியா வலைதளத்தில் இந்த மாடல் பட்டியலிடப்பட்டு இருப்பதை அடுத்து வரும் வாரங்களில் இதன் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கலாம்.


வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட XC40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் விலை ரூ. 75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எலெக்ட்ரிக் மாடலுக்கான விலையை வால்வோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், இந்த விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒரு ஆண்டுக்கு முன் இந்திய சந்தையில் காட்சிப்படுத்தி இருந்தது. பின் இந்த மாடலுக்கான முன்பதிவு ஜூன் மாதமும், விற்பனை அக்டோபர் 2021 வாக்கில் துவங்கும் என்றும் அறிவித்தஉ இருந்தது. எனினும், செமிகண்டக்டர் குறைபாடு காரணமாக இது நடைபெறவில்லை. தற்போது வால்வோ இந்தியா வலைதளத்தில் இந்த மாடல் பட்டியலிடப்பட்டு இருப்பதை அடுத்து வரும் வாரங்களில் இதன் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் காம்பேக்ட் மாட்யுலர் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் பிளான்க்டு-ஆஃப் கிரில், எல்.இ.டி. ஹெட்லைட்கள், 19 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப், இருக்கைகளுக்கு லெதர் கவர், ஹண்ட்ஸ்-ஃபிரீ வசதி, டூ-சேன் கிளைமேட் கண்ட்ரோல், 12 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆண்ட்ராய்டு சார்ந்த தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பவர்டு டிரைவர் சீட், பவர்டு பாசன்ஜர் சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

பாதுகாப்பிற்கு வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் ஏழு ஏர்பேக், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், டையர் பிரெஷர் மாணிட்டர், பிலைன்ட் ஸ்பாட் மாணிட்டர், கிராஸ் டிராஃபிக் அலெர்ட், 360 டிகிரி கேமரா, ஆட்டோ பார்க்கிங், லேன் கீப் அசிஸ்ட், என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் ஆல்-வீல் டிரைவ் செட்டப், 204 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இணைந்து 408 ஹெச்.பி. திறன், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

இதில் உள்ள 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், முழுமையாக சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த பேட்டரியை 11kW AC அல்லது 150kW DC மூலம் சார்ஜ் செய்யலாம். இதனை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்களே ஆகும். 

click me!